கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விருதுநகரில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!


ஆகஸ்ட்: 25.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகிறார்கள்.

அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 10-ஆவது வார்டு பகுதியில் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில், கிருமி நாசினி தெளித்து பணியில் மஜக வினர் ஈடுபட்டனர்.

இதில் விவசாய அணி மாவட்ட செயலாளர் பெரியசாமி, நகரச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், பொருளாளர் காசிம், 10-ஆவது வார்டு செயலாளர் சம்சுதீன், ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருதுநகர்_மாவட்டம்
25.08.2020