ஜூலை.20, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தெற்கு தெருவில் அமைந்துள்ள கிராம கூட்டுறவு அங்காடியில் இயங்கி வந்த மின் விசிறி பழுதடைந்தது. பொருட்கள் வழங்கும் இடத்தில் இயங்கி வந்த மின் விசிறி பழுதடைந்ததால் பணியாளருக்கும், நீண்டவரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனையறிந்த மஜக நகர செயலாளர் பால்கார மைதீன், பொருளாளர் பசீர் அலி மற்றும் நிர்வாகிகள் உடனடியாக அங்காடிக்கு புதிய மின்விசிறி அமைத்து கொடுத்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #முத்துப்பேட்டை_நகரம் #திருவாரூர்_மாவட்டம்.
Month:
நாகை தொகுதியில் பொதுச் செயலாளர் முன்னிலையில் மஜகவில் இணைந்த சமூக ஆர்வலர்கள்!
ஜூலை.20, நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். கொரோனா காலக்கட்டத்திலும் அயராது பணியாற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மஜகவின் சேவைகளால் கவரப்பட்டு தங்களை கட்சியில் இணைத்து கொண்டதாக குறிப்பிட்டவர்களிடம், இக்கொரோனா காலக்கட்டத்தில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் பணியாற்றிடுமாறு பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டார். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் யூசுப்தீன், குவைத் மண்டல துணைச்செயலாளர் பாசில், IT Wing நிசாத், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், துணைச் செயலாளர் பாவா அன்சாரி, பேபிஷாப் பகுருதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
குமரிமாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் விநியோகம்!
ஜூலை.20, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஜமாஅத் செயலாளர் அன்வர் ஹுசேன் மற்றும் திருவைப் பேரூராட்சியில் உள்ள ஆர்.சி தேவாலயத்தின் மூத்த பாதிரியார் ஆகியோரால் இந்நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி பருகி பயனடைந்தனர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், திருவிதாங்கோடு பேரூராட்சி செயலாளர் நசீர், பொருளாளர் அன்சாரி, நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர்கள் ஆல்வின், பிரின்ஸ், மருத்துவ சேவை அணி பைரோஸ், மாலிக், சஜீர், அன்சில் ஆகியோர் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 20-07-2020
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த நினைப்பவர்களை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யகோரி..! மஜக நெல்லை மாவட்டம் சார்பாக வெண்ணிற ஆடை அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!
நெல்லை ஜீலை - 20 தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும் கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், கிஷோர் கே சாமி, மாரிதாஸ், கஜேந்திரன், அருண் கிருஷ்னன் உள்ளிட்ட பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மஜகவினர் "அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன், சமூக பேதமின்றி பாசிச பயங்கரவாதிகளை எதிர்க்க வேண்டும், அதே சமயம் அவர்களை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது" என்பதையும் வலியுறுத்தி வெண்ணிற ஆடை அணிந்து பதாகை ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மாவட்டச் செயளாலர் நெல்லை நிஜாம் தலைமையில், மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா ஒருங்கினைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மஜக முன்னால் மாவட்டச் செயளாலர் இக்பால், மனித உரிமை பாதுகாப்பு அணி அப்பாஸ், நெல்லை பகுதிச் செயளாலர் கலீல், பாளை பகுதிச் செயளாலர்
தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு – மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மாவட்ட பொறுப்புக்குழு தலைவராக, A.பசீர் அகமது அலைபேசி; 9994203389 பொறுப்புக்குழு உறுப்பினர்கள், 1) அதிரை ஸமார்ட் சாகுல் அலைபேசி; 9750751546 2) அதிரை சேக் அலைபேசி; 7010832030 3) மதுக்கூர் சாகுல் அலைபேசி; 9751456622 4) ஒரத்தநாடு அமீன் அலைபேசி; 9566344466 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 20-07-2020