ஜூலை.20,
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஜமாஅத் செயலாளர் அன்வர் ஹுசேன் மற்றும் திருவைப் பேரூராட்சியில் உள்ள ஆர்.சி தேவாலயத்தின் மூத்த பாதிரியார் ஆகியோரால் இந்நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது.
வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி பருகி பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், திருவிதாங்கோடு பேரூராட்சி செயலாளர் நசீர், பொருளாளர் அன்சாரி, நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர்கள் ஆல்வின், பிரின்ஸ், மருத்துவ சேவை அணி பைரோஸ், மாலிக், சஜீர், அன்சில் ஆகியோர் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
20-07-2020