ஜூலை.20,
நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் மஜக பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
கொரோனா காலக்கட்டத்திலும் அயராது பணியாற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மஜகவின் சேவைகளால் கவரப்பட்டு தங்களை கட்சியில் இணைத்து கொண்டதாக குறிப்பிட்டவர்களிடம், இக்கொரோனா காலக்கட்டத்தில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் பணியாற்றிடுமாறு பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.
இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் யூசுப்தீன், குவைத் மண்டல துணைச்செயலாளர் பாசில், IT Wing நிசாத், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், துணைச் செயலாளர் பாவா அன்சாரி, பேபிஷாப் பகுருதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.