தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த நினைப்பவர்களை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யகோரி..! மஜக நெல்லை மாவட்டம் சார்பாக வெண்ணிற ஆடை அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

நெல்லை ஜீலை – 20

தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும் கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், கிஷோர் கே சாமி, மாரிதாஸ், கஜேந்திரன், அருண் கிருஷ்னன் உள்ளிட்ட பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மஜகவினர் “அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன், சமூக பேதமின்றி பாசிச பயங்கரவாதிகளை எதிர்க்க வேண்டும், அதே சமயம் அவர்களை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது” என்பதையும் வலியுறுத்தி வெண்ணிற ஆடை அணிந்து பதாகை ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மாவட்டச் செயளாலர் நெல்லை நிஜாம் தலைமையில், மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா ஒருங்கினைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மஜக முன்னால் மாவட்டச் செயளாலர் இக்பால், மனித உரிமை பாதுகாப்பு அணி அப்பாஸ், நெல்லை பகுதிச் செயளாலர் கலீல், பாளை பகுதிச் செயளாலர் சேக் அப்துல் காதர், பாளை பகுதி பொருளாளர் முஹம்மது மைதீன், மேலப்பாளையம் பகுதிச் செயளாலர் தமீம் அன்சாரி, பகுதி பொருளாளர் நாகூர்மீரான், பேட்டை நகரச் செயளாலர் இரா.முத்துக்குமார், துணை செயளாலர் ITI சங்கர், மேலப்பாளையம் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
20-07-2020