ஜூலை.10, திருவாரூர் விஜயபுரத்தில் அமைந்துள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் நோயாளிகள் உதவியாளர்கள் தங்கும் அறைக்கு மின்விசிறிகள் தேவை என மஜக விற்கு கோரிக்கை வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று திருவாரூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரண்டு மின்விசிறிகள் வாங்கி பொறுத்தி கொடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக்அப்துல்லா வலியுறுத்தலில், திருவாரூர் நகர செயலாளர் சித்திக், பொருளாளர் பாலகணேஷ் உள்ளிட்டோர் முன்னின்று இதற்கான பணிகளை செய்து கொடுத்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
Month:
திருச்சி மஜக விமானநிலைய சேவைக்குழுவிற்கு கோரிக்கை! மயிலாடுதுறையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இல்லம் திரும்ப மஜக நடவடிக்கை!!
ஜூலை.10, கோரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தும் 9 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தி வைத்திருப்பதாக நாகை மாவட்டத்தை சார்ந்த விசுவநாதன் என்ற நபர் திருச்சி மஜக விமான நிலைய சேவைக்குழுவை தொடர்பு கொண்டு உதவி கோரினார். கடந்த பத்து நாளைக்கு முன் குவைத்தில் இருந்து திருச்சி வந்து ஏழுநாட்கள் தனிமைப்படுத்துதல் முடித்துக்கொண்டு நாகை சென்றதாகவும் அங்கே மூன்று நாட்கள் தனிமைப் படுத்துதல் என்று மயிலாடுதுறையில் ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளதாகவும் மூன்று நாட்கள் ஆகியும் எந்த பதிலும் இல்லாத சூழலில் 8 நபர்கள் உள்ளோம் என்று அவர் தந்த தகவலை திருச்சி மஜகவினர் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்து தேவையான உதவிகள் செய்யும்படி கேட்டு கொண்டனர். அதனடிப்படையில், மாவட்ட செயலாளர் மாலிக் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஹாஜாசலீம் ஆகியோர் தாசில்தாரை உள்ளிட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் 8 பேரையும் அவர்களது இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #மயிலாடுதுறை #நாகைவடக்குமாவட்டம்.
மஜக கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுச்சி..! இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர்..!
ஜூலை.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். மாவட்டச்செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபீகர் அலி ஆகியோர் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மஜக மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கன்னியாகுமரி_மாவட்டம். 10/07/2020
தொண்டியில் கஞ்சா கும்பல் பிடிபட்டது..துரித நடவடிக்கை எடுப்பதாக கருணாசு MLA உறுதி..!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்று பிடிபட்டது. அக்கும்பலை பிடிக்க பெரிதும் உதவிய தொண்டியை சேர்ந்த இளைஞர்கள் மீதும் காவல்துறையினரால் பொய்வழக்கு புனையப்பட்டுள்ளது. போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பலை பிடிக்க உதவிய இளைஞர்களை பாராட்டாமல், அவர்கள் மீது வழக்குத் தொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ஊர் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் போதை பொருட்கள் விற்பனை செய்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவும் உதவுமாறு மஜக துணைப் பொதுச்செயலாளர் மண்டலம். ஜெய்னுல் ஆபீதின் அவர்கள், பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களிடம் வலியுறுத்தினார். அவர் இது குறித்து திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் MLA., அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் இன்று காலை தொண்டிக்கு வருகை தந்த கருணாஸ் MLA., அவர்கள், ஐக்கிய ஜமாத் மற்றும் பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். பிறகு இது குறித்து மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு சென்று
ஜூலை 10 வேலூர் புரட்சி நாள்… மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள கட்டுரை
ஐரோப்பியர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் ஆயுதக் கிளர்ச்சிகள் மூலம் நடைப்பெற்ற வீரம் செறிந்த ரத்த வரலாறுகள் ஏராளம். அதில் வேலூர் புரட்சி முதன்மையானது. 1806 ஆம் ஆண்டு இதே ஜூலை 10 ஆம் நாளில் தான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைப்பெற்றது. அதை சிப்பாய் கலகம் என ஆங்கிலேயர் வர்ணித்தனர். ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் அதை முதல் இந்திய சுதந்திப் போராட்டம் என திருத்தினர். விடுதலைப் போராளி திப்பு சுல்தானின் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டனர். விழிகளில் விடுதலை நெருப்பையும், இதயத்தில் வீரத்தையும் கொண்டிருந்த அவரது பிள்ளைகள் பிரிட்டனின் துரைத்தனத்திற்கு அடங்கிப்போக தயாராக இல்லை. மானமா? சமாதானமா? என்றால் மானமே முக்கியம் என முழங்கினார்கள். சிறைப்பட்டாலும் சீற்றம் தணியவில்லை. பாட்டனார் ஹைதர் அலியின் தியாகமும், தந்தை திப்பு சுல்தானின் தீரமும் அவர்களை வழி நடத்தியது. தங்கள் தாகம் சுதந்திர நாடே என உறுமினர். தாங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த கோட்டையிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை தொடங்குவது என அவர்கள் தீர்மானித்தனர். இதற்கு முன்னோட்டமாக அவர்கள் எடுத்த முடிவு துணிச்சல் மிக்கது. தியாகப்பூர்வமானது. தங்கள் சகோதரிக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர். ஜூலை 9