மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனைக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட மஜகவினர் பங்கேற்பு!!


திருவண்ணாமலை.மார்ச்.14.,

திமுக-வின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு.ஏ.வா.வேலு அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதி வேட்பாளர்கள் அறிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மஜகவினர் பங்கேற்று, தங்களுடைய பிரச்சார வியூகம் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலமும் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பம்பரம் போல் சுழன்று களப்பணியாற்றுவர்கள் என மஜக-வின் மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் அவர்கள் தெரிவித்தார்.

உடன் மாவட்ட பொருளாளர் சையத் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் பாபு, அமீர்கான், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர் மற்றும் நகர பொருளாளர் அம்ஜத்கான், நகர துணை செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElections2021
#MJK2021
#திருவண்ணாமலை_மாவட்ட_தொகுதி_தேர்தல்பணிக்குழு
14.03.2021