திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம்..! விருதுநகர் மாவட்ட மஜகவினர் பங்கேற்பு..!!


விருதுநகர்.மார்ச்.14.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.தங்கப்பாண்டியன் அவர்களை ஆதரித்து நடைபெற உள்ள தேர்தல் பரப்புரைகள் தொடர்பான கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்களின் தலைமையில் மஜகவினர் பங்கேற்றனர், கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் அவர்கள் மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைத்தார்.

இந்நிகழ்வில் ராஜபாளையம் நகர பொறுப்பாளர்கள் சம்சுதீன், பெரியசாமி, முருகேச ராஜா, IKP மகபூப் பாஷா உள்ளிட்ட நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElections2021
#MJK2021
14.03.2021