ஜூலை.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் திருவை பேரூராட்சியில் 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்டச்செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஜிப் ரகுமான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகரச் செயலாளர் அமீர்கான் மற்றும் நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம். 14/07/2020
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு!! – கோவை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக J. சிராஜுதீன் த/பெ A.ஜெயிலாபுதீன். நெ.13-பிளாக், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட், தெற்கு உக்கடம். கோவை 641001 அலைபேசி:7904124210 நியமனம் செய்யப்படுகிறார் மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.. இப்படிக்கு மு.தமிமுன்அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 14.07.2020
ஈரானில் தவிக்கும் எஞ்சிய தமிழ் மீனவர்களை மீட்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அரசுக்கு வேண்டுகோள்!
ஜூலை 14, தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கொரோனா நெருக்கடி காரணமாக ஈரானில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கக்கோரி சட்டமன்றம் நடந்த போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மற்ற கட்சியினரும் கோரிக்கை வைத்தனர். தற்போது அவர்களில் அநேகம் பேர் கப்பலில் மீட்டு வரப்பட்டனர். இதில் 40 பேர் இன்னும் ஈரானில் தவித்து வருகின்றனர். இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட மஜக வினர் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து இன்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் அவர்களை அலைபேசியில் தொடர்புக் கொண்டு அவர்களின் மீட்பு குறித்து அவர் பேசினார். இது குறித்து தமிழக அரசு, இந்திய வெளியுறவு துறை மூலம் ஈரான் அரசிடம் பேசி வருவதாகவும், விரைந்து அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரங்களை குமரி மாவட்ட ஆட்சியரிடமும் மஜக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் 14.07.2020
மலேசியா முகாமில் தவித்த பயணிகள் திருச்சி விமான நிலையம் வருகை! மஜக மாநிலப் பொருளாளர் எஸ்எஸ் ஹாரூன்ரசீது வரவேற்றார்!
ஜூலை.14, கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டதால் மலேசியாவுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர் அவர்களில் சிலரை மலேசியக் குடியுரிமை அதிகாரிகள் சரியான காரணம் இன்றி பிடித்து முகாம்களில் அடைத்தனர். மலேசியாவில் உள்ள இந்தியர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூலம் அவர்களை மீட்க மஜக சார்பில் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் சந்தித்தது அலுவல் ரீதியாக உதவுமாறு கோரிக்கை வைத்தார். இந்நிலையில், முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டு 13.07.2020 அன்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது வரவேற்றார். பொருளாளருடன் திருச்சி மாவட்டச் செயலாளர் பக்கிர்மைதீன் (எ) பாபுபாய், பொருளாளர் சேக்தாவுத், துணை செயலாளர்கள் M. பக்ருதின் , Er.காதர், தர்கா பாரூக், அரியமங்கலம் ஜமால், இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மருத்துவ சேவை அணி செயலாளர் அபு, MJVS செயலாளர் அபுபக்கர் சித்திக், MJTS செயலாளர் G.K.காதர், காட்டூர் ஷாரூக்கான் உள்ளிட்ட நிர்வாகிகள்
வெளிநாட்டு தப்லீக் பயணிகள் ஹஜ் இல்லம் வருகை..! மஜக மாநில துணை பொதுச்செயலாளர் தைமிய்யா தலைமையில் மஜகவினர் சந்திப்பு..!
ஜூலை.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் முயற்சியால் 129 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் இன்று இரவு புழல் சிறார் சிறையில் இருந்து சென்னை ஹஜ் கமிட்டி இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களின் முதல் வாகனம் மாலை 5:30-க்கு புறப்பட்டதும் அதிகாரிகள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களுக்கு தகவல் அளித்து விபரங்களை பகிர்ந்துக் கொண்டனர். அவர் இத்தகவலை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் காஸிபி மற்றும் பஷீர் ஹாஜியாரிடம் தெரிவித்தார். பிறகு ஹஜ் கமிட்டி இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா தலைமையில் நிர்வாகிகள் உடனே சென்று வருகை தந்த தப்லீக் ஜமாத்தினரை சந்தித்து பேசினர். அவர்கள் களைப்பு நீங்கி மிகவும் மகிழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டனர். பின்னர் அங்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் திருமதி, சீத்தாலட்சுமி அவர்களிடம் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மஜகவினர் பேசினர். பின்னர் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்பு கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்கள். அங்கு வருகை தந்த அனைத்து தப்லீக் பயணிகளுக்கும் தேவையான முகக்கவசங்கள் மஜக சார்பாக வழங்கப்பட்டது. அப்போது கூட்டமைப்பு