வெளிநாட்டு தப்லீக் பயணிகள் ஹஜ் இல்லம் வருகை..! மஜக மாநில துணை பொதுச்செயலாளர் தைமிய்யா தலைமையில் மஜகவினர் சந்திப்பு..!


ஜூலை.13.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் முயற்சியால் 129 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் இன்று இரவு புழல் சிறார் சிறையில் இருந்து சென்னை ஹஜ் கமிட்டி இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

அவர்களின் முதல் வாகனம் மாலை 5:30-க்கு புறப்பட்டதும் அதிகாரிகள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களுக்கு தகவல் அளித்து விபரங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

அவர் இத்தகவலை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் காஸிபி மற்றும் பஷீர் ஹாஜியாரிடம் தெரிவித்தார்.

பிறகு ஹஜ் கமிட்டி இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா தலைமையில் நிர்வாகிகள் உடனே சென்று வருகை தந்த தப்லீக் ஜமாத்தினரை சந்தித்து பேசினர்.

அவர்கள் களைப்பு நீங்கி மிகவும் மகிழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டனர்.

பின்னர் அங்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் திருமதி, சீத்தாலட்சுமி அவர்களிடம் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மஜகவினர் பேசினர்.

பின்னர் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்பு கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்கள்.

அங்கு வருகை தந்த அனைத்து தப்லீக் பயணிகளுக்கும் தேவையான முகக்கவசங்கள் மஜக சார்பாக வழங்கப்பட்டது.

அப்போது கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மெளலவி மன்சூர் காஸிபி அவர்களும் உடனிருந்தார். அவர் காலையிருந்து அங்கு தங்கியிருந்து அங்கு அடிப்படை பணிகளை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ், மத்திய சென்னை கிழக்கு மாவட்டச்செயலாளர் பிஸ்மில்லா கான், வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அன்வர், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்.
13-07-2020