கன்னியாகுமரி.ஜூலை.13.,
வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வழியாக வரும் தமிழக மக்களுக்கு உணவு மற்றும் வாகன வசதி ஏற்பாடு செய்வது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தேவையான e-pass வசதிகளையும் குமரி மாவட்ட மஜக-வினர் செய்து வருகின்றனர்.
இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்டச்செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் நிர்வாகிகள் இன்று டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் அவர்களை சந்தித்து பேசினர்.
இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை மஜகவினர் எடுத்துரைத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கக்கோரினர்.
அவர் மஜகவின் கோரிக்கையை ஏற்று உடனே துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கு உண்டான சிறப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாக வாக்களித்தார்.
இச்சந்திப்பின் போது மாவட்ட துணைச்செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ் மற்றும் மாநகரச் செயலாளர் அமீர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
13-07-2020