ஜூலை.14,
கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டதால் மலேசியாவுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர் அவர்களில் சிலரை மலேசியக் குடியுரிமை அதிகாரிகள் சரியான காரணம் இன்றி பிடித்து முகாம்களில் அடைத்தனர்.
மலேசியாவில் உள்ள இந்தியர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூலம் அவர்களை மீட்க மஜக சார்பில் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் சந்தித்தது அலுவல் ரீதியாக உதவுமாறு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டு 13.07.2020 அன்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது வரவேற்றார்.
பொருளாளருடன் திருச்சி மாவட்டச் செயலாளர் பக்கிர்மைதீன் (எ) பாபுபாய், பொருளாளர் சேக்தாவுத், துணை செயலாளர்கள் M. பக்ருதின் , Er.காதர், தர்கா பாரூக், அரியமங்கலம் ஜமால், இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மருத்துவ சேவை அணி செயலாளர் அபு, MJVS செயலாளர் அபுபக்கர் சித்திக், MJTS செயலாளர் G.K.காதர், காட்டூர் ஷாரூக்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக மஜகவின் முயற்சிக்கு பெரிதும் உதவிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயகாந்தன் அவர்களை நேரில் சந்தித்த மஜக மாநில துணை செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமையிலான மஜக நிர்வாகிகள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
இறைவன் நாடினால் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள தமிழர்கள் மஜக சார்பில் விரைவில் மீட்கப்படுவார்கள்.
தமிழக பயணிகளை மீட்பதற்கு உதவிய மலேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் டத்தோ செய்யது இபுறாகிம், மலேசிய உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் டத்தோ ஜவஹர் அலி, இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஷீர் அகமது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோருக்கு மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் தொலைபேசி மூலம் நன்றியை தெரிவித்தார்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.
13/07/2020