ஈரானில் தவிக்கும் எஞ்சிய தமிழ் மீனவர்களை மீட்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அரசுக்கு வேண்டுகோள்!

ஜூலை 14,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கொரோனா நெருக்கடி காரணமாக ஈரானில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கக்கோரி சட்டமன்றம் நடந்த போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மற்ற கட்சியினரும் கோரிக்கை வைத்தனர்.

தற்போது அவர்களில் அநேகம் பேர் கப்பலில் மீட்டு வரப்பட்டனர்.

இதில் 40 பேர் இன்னும் ஈரானில் தவித்து வருகின்றனர்.

இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட மஜக வினர் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து இன்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் அவர்களை அலைபேசியில் தொடர்புக் கொண்டு அவர்களின் மீட்பு குறித்து அவர் பேசினார்.

இது குறித்து தமிழக அரசு, இந்திய வெளியுறவு துறை மூலம் ஈரான் அரசிடம் பேசி வருவதாகவும், விரைந்து அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விபரங்களை குமரி மாவட்ட ஆட்சியரிடமும் மஜக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல்,

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
14.07.2020