ஜூலை.14.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் திருவை பேரூராட்சியில் 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.
மாவட்டச்செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஜிப் ரகுமான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகரச் செயலாளர் அமீர்கான் மற்றும் நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்.
14/07/2020