ஏப்.19, வேதாரண்யம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தோப்புத்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ், மாநில செயற்குழு உறுப்பினர் சேக் மன்சூர் உள்ளிட்ட மஜக வினர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
Month:
ஆயங்குடியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
ஏப்.19, இன்று கடலூர் தெற்கு, ஆயங்குடி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்த மூலிகை மருந்தான 'கபசுர குடிநீர்' மஜகவினால் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. மஜக அவசர ஊர்தி மூலம் எடுத்து சென்று ஊராட்சி முழுவதும் வீடுவீடாக சென்று மஜகவினர் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து விநியோகம் செய்திட பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்தினர். இதில் மஜக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவரும், மஜக மாவட்டப் பொருளாளருமான A.S பஜில் முஹம்மது, குவைத் மண்டல நிர்வாகி நாசர், நகர செயலாளர் புர்ஹானுதீன், நகர நிர்வாகிகள் சாது, சுபகத்துல்லாஹ், அமானுல்லாஹ், பஜில் உள்ளிட்ட மஜகவினர் இப்பணிகளை மேற்கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்தெற்குமாவட்டம்.
மஜக வேலூர் மாவட்டம் சார்பாக மனிதநேயப் பணிகள்..!
வேலூர்.ஏப்ரல்.18., கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாநகரில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா போன்ற பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறை அனுமதியுடன் அவர்களுடன் இணைந்து தொண்டூழியர்களாக (Volunteers) மனிதநேய ஜனநாயக கட்சியினர் பணியாற்றி வருகின்றனர். வீடுகளில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருந்து, பால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதில் தன்னார்வலர்களாக மஜக-வினரின் மனிதநேயப்பணிகள் காவல் துறை மற்றும் பொதுமக்களால் பாரட்டப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணியில் மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் அமீன் முன்னிலையில் இளைஞர் அணியினர் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருக்கும் அனைத்து நாட்களும் தேவை கருதி இப்பணி தொடரும் என்று மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாசின் தெரிவித்தார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 17.04.2020
கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! மஜகசார்பில் அச்சன் புதூரில் கபசுரகுடிநீர்
கொரோனா விழிப்பணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது!! தென்காசி:ஏப்.18., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பணிகளை மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். அச்சன்புதூரில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், அவர்கள் தொடங்கி வைத்தார். கொரோனா விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரத்தை தென்காசி மாவட்டச் செயலாளர்.M.பீர்மைதின் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் நகரச் செயலாளர் S.முஹமது நாசர், நகரப் பொருளாளர் P.கமால்தீன், நகர துணைச் செயலாளர்கள் M.சேக்முகமது உசேன், ரியாஸ் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். மஜக-வினரின் இப்பணியை பொதுமக்கள், பெரிதும் பாராட்டினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 17.04.2020
மஜக திருவாரூர் மாவட்டம் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்!
சென்னை.ஏப்ரல்.17., இந்தியா முழுவதும் கடந்த 24 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக திருவாரூர் மாவட்டம் சார்பாக மாவட்டப் பொருளாளர் சேக் அப்துல்லாஹ் தலைமையில் புலிவலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் அஷமது ஜலால், துணைச் செயலாளர் நிஜாமுதீன், நகரச் செயலாளர் சித்திக், நகரப் பொருளாளர் பாலா, கிளை செயலாளர் சேத்தப்பா (எ) முகம்மது மைதீன், கிளை இலைஞர் அணிச் செயலாளர் ரியாஜி மற்றும் கமாலுதீன், அன்சாரி உள்ளிட்ட மஜகவினர் பல குழுக்களாக பிரிந்து நிவாரண பொருட்களை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 17-04-2020