சென்னை.ஏப்ரல்.17.,
இந்தியா முழுவதும் கடந்த 24 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மஜக திருவாரூர் மாவட்டம் சார்பாக மாவட்டப் பொருளாளர் சேக் அப்துல்லாஹ் தலைமையில் புலிவலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழை எளியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் அஷமது ஜலால், துணைச் செயலாளர் நிஜாமுதீன், நகரச் செயலாளர் சித்திக், நகரப் பொருளாளர் பாலா, கிளை செயலாளர் சேத்தப்பா (எ) முகம்மது மைதீன், கிளை இலைஞர் அணிச் செயலாளர் ரியாஜி மற்றும் கமாலுதீன், அன்சாரி உள்ளிட்ட மஜகவினர் பல குழுக்களாக பிரிந்து நிவாரண பொருட்களை விநியோகித்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவாரூர்_மாவட்டம்
17-04-2020