கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! மஜகசார்பில் அச்சன் புதூரில் கபசுரகுடிநீர்


கொரோனா விழிப்பணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது!!

தென்காசி:ஏப்.18.,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பணிகளை மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். அச்சன்புதூரில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், அவர்கள் தொடங்கி வைத்தார்.

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரத்தை தென்காசி மாவட்டச் செயலாளர்.M.பீர்மைதின் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் நகரச் செயலாளர் S.முஹமது நாசர், நகரப் பொருளாளர் P.கமால்தீன், நகர துணைச் செயலாளர்கள் M.சேக்முகமது உசேன், ரியாஸ் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

மஜக-வினரின் இப்பணியை பொதுமக்கள், பெரிதும் பாராட்டினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
17.04.2020