மஜக வேலூர் மாவட்டம் சார்பாக மனிதநேயப் பணிகள்..!

வேலூர்.ஏப்ரல்.18.,

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாநகரில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா போன்ற பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறை அனுமதியுடன் அவர்களுடன் இணைந்து தொண்டூழியர்களாக (Volunteers) மனிதநேய ஜனநாயக கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.

வீடுகளில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருந்து, பால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதில் தன்னார்வலர்களாக மஜக-வினரின் மனிதநேயப்பணிகள் காவல் துறை மற்றும் பொதுமக்களால் பாரட்டப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணியில் மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் அமீன் முன்னிலையில் இளைஞர் அணியினர் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருக்கும் அனைத்து நாட்களும் தேவை கருதி இப்பணி தொடரும் என்று மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாசின் தெரிவித்தார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
17.04.2020