ஏப்ரல்.09, நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளுக்கு சென்று மு.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் ஏகராஜ் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு வணிகர்களிடமும், பொதுமக்களிடமும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், முக கவசம் அணியுமாறும் வலியுறுத்தினார். பிறகு நகராட்சி ஆணையர் ஏகராஜிடம், நடமாடும் காய்கறி கடை குறித்தும் கேட்டறிந்தார். 130 ரூபாய் மதிப்புள்ள காய்கறி பை 100 ரூபாய்க்கு வீதிகளுக்கு சென்று விற்கப்படுவதாகவும், இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார். பிறகு அங்கு மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இறைச்சி மற்றும் கோழிக் கடைகளுக்கும் சென்று , அங்கு தூய்மை ஒழுங்கை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிறகு பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து பூ மற்றும் காய்கனி வணிகர்களையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று, அங்கு பணியாற்றும் தன்னார்வலர்களையும் சந்தித்து பாராட்டினார். இதில் ஷேக் அஹ்மதுல்லா, முரளி, லவ்லி யூசுப், இஸ்மத், மகேஷ், கண்ணன் ஆகியோரும் உடன் சென்றனர். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2382901811809580&id=700424783390633
Month:
மஜக துறைமுகம் பகுதி சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்..!
சென்னை.ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு இன்று கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இக்குடிநீரானது சளி, இருமல் உள்ளிட்டவைகளை சீர் செய்வதோடு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடியது என்பதால் மக்கள் ஆர்வமுடன் பெற்று அருந்தினர். இதற்கான ஏற்பாடுகளை துறைமுகம் சிக்கந்தர், அம்ஜத் உள்ளிட்ட மஜகவினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் மஜக மருத்துவரணி மாநில துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை விநியோகித்தார். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னை_மாவட்டம் 09.04.2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக அதிரை சேக் த/பெ: அப்துல் ரஹிம் 42c/1 புதுத்தெரு அதிராம்பட்டினம். பட்டுக்கோட்டை (Tk) தஞ்சை(Dt) 614701 அலைபேசி: 7010832030 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 07-04-2020
மஜகவின் மனிதநேய பணிகள்!
சென்னை.ஏப்ரல்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டம் கொளத்தூர் பகுதி சார்பில் இன்று 07-04-2020 சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் மற்றும் Quarantine எனப்படும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு பொருட்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், திருமங்கலம் சமீம் அஹமத், வடசென்னை மாவட்டச் செயலாளர் அன்வர் மற்றும் துணை செயலாளர் ஓட்டேரி இரசாக் ஆகியோர் சென்னை ஓமந்தூரார் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு.நாராயணன் பாபு அவர்கள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் திரு.ரமேஷ் ஆகியோர் வசம் ஒப்படைத்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வடசென்னைமேற்குமாவட்டம் 07.04.2020
உயிர்காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்.! முதமிமுன்அன்சாரி MLA மத்தியஅரசுக்கு வலியுறுத்தல்.!!
கொரோனா வைரஸ் நோயை ஒழிக்கும் பணியை இந்தியாவெங்கும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவரும் நிலையில், முக்கிய உயிர் காக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது நல்லதல்ல. மனிதாபிமானம் எல்லையற்றது என்பது உண்மை. அதே சமயம் நமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகே, பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. நமது நாடு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு அதிக அளவில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் இறுதி வரையிலாவது இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க கூடாது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டல் தொணியிலான வேண்டுகோளுக்கு உடனடியாக பணிந்து, உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்பது நம் நாட்டின் நலன் சார்ந்த அரசியலுக்கு நல்லதல்ல. நம் நாட்டின் மக்கள் தொகை அளவுக்கேற்ப, இது போன்ற மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியமாகும். மத்திய அரசு நம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA #பொதுச்_செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 07.04.2020