சேலம்.டிசம்பர்.16.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாவட்டச் செயலாளர் மஹபூப் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் O.S. பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருகிணைப்பாளர் மெளலா.நாசர், அவைத் தலைவர் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின் ஷா, ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றினர். இறுதியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தில் திருத்ததில் ஈழ தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும், நேபாளத்திலிருந்து வரும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்களை புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சனாவுல்லாஹ் கான் நன்றி கூறினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, மாவட்ட துணைச் செயலாளர்கள் அஸ்லாம், சர்புதீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம். 16-12-2019
Month:
ஆம்பூரில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு மஜகவினர் கைது.
ஆம்பூர்.டிசம்பர்.16.., திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் நகர செயலாளர் M.பிர்தோஸ் அஹ்மத் தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாவட்டச் செயலாளர் M.ஜஹீருஸ் ஜமா முன்னிலை வகித்தார். இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்தனர். இதில், மாவட்ட துணைச் செயலாளர்கள் S.M.ஷாநவாஸ் T.R.முன்னா(எ)நஸீர் MJTS மாவட்டச் செயலாளர் T.D. அப்ரோஸ் அஹ்மத் நகர பொருளாளர் தப்ரோஸ் அஹ்மத், நகர துணைச் செயலாளர் அஷ்பாக் அஹ்மத், நகர மருததுவ அணிச் செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞரணி செயலாளர் இம்ரான் அலீம் டிஷ் நாசிர் மற்றும் மஜக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரளாக பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு கைதாகினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்திருப்பத்தூர்மாவட்டம்.
புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் இந்தியாவின் வீதிகளையாராலும் கட்டுப்படுத்தமுடியாது!
ஈழத் தமிழர்களை, அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களை, நேபாள கிறிஸ்தவர்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, #விழுப்புரத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களை இணைத்து ஜமாத்துல் உலமா ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசும் போது, 'இந்த மூன்று கோரிக்கைகளை இச்சட்டத்தில் இணைக்காவிட்டால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது' என்றும், 'இந்தியாவின் வீதிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது' என்றும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக மக்களும் பங்கேற்று ஆதரவளித்தனர். பொதுச் செயலாளருடன், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் செளக்கத், மாவட்ட துணைச் செயலாளர் பைரோஸ், செய்யது உசேன், விழுப்புரம் நகர செயலாளர் ஜின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #விழுப்புரம்_மாவட்டம்.
ஜாமியாமில்லியா மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் நடத்தியது அரசுவன்முறை, முதமிமுன் அன்சாரி MLA கடும் கண்டனம்
#மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAகடும்_கண்டனம்..! சென்னை.டிசம்பர்.16.., மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில், நேற்று அமைதியாக போராடிய ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. காவல்துறையே வாகனங்களை எரித்து, அந்த பழியை மாணவர்கள் மீது போட்டு, வன்முறையை திட்டமிட்டு உருவாக்கியிருப்பது பேரதிர்ச்சியை தருகிறது, பல்கலைக்கழக துணை வேந்தரின் அனுமதியில்லாமலேயே. அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து போலீஸ் அராஜகங்களை அரங்கேற்றியிருக்கிறது. விடுதிகளுக்குள் நுழைந்து மாணவர்களை சகட்டுமேனிக்கு அடித்து படுகாயப்படுத்தியதோடு, மாணவிகளின் விடுதிகளுக்குள்ளும் நுழைந்து தாக்கியிருக்கிறார்கள். மாணவிகளை மானபங்கம் செய்யவும் முயன்றதாக வரும் செய்திகள், நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா.? என்ற ஐயத்தை எழுப்புகிறது. தங்களின் மனித உரிமை மீறல்கள் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, விளக்குகளை அணைத்து விட்டு தாக்குதலை நடத்தியிருப்பது டெல்லி போலீஸின் கொடூர முகத்தை காட்டுகிறது. அத்துடன் முகத்தை மறைத்தப்படி, சமூக விரோதிகளும் போலீஸ் துணையோடு பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து வன்முறை நிகழ்த்தியிருப்பது, அதன் பின்னணிகளும் ஃபாசிச கும்பலின் சதித் திட்டங்களை வெளிக்காட்டுகிறது. மேலும் இதை படம் பிடித்த, பத்திரிக்கையாளர்களையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். மத யானை வெறிப்பிடித்து, நாசத்தை ஏற்படுத்தியது போல,
தேசியக்கொடி ஏந்தி புதிய குடியுரிமைசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜகவினர் ஆர்ப்பாட்டம்!
டிச.15, பெரம்பலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் M.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் லெப்பைக் குடிகாடு பேருந்து நிலையம் அருகில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜகவினர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், சட்டத்திற்கெதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிறுவர்கள் கைகளில் ஏந்தி நின்றது அப்பகுதியை கடந்து சென்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. மஜக மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி S.இப்ராஹிம்ஷா, திருச்சி பேரா.மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக கண்டன உரையாற்றிட மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் N.ஜஹாங்கிர் பாஷா, H.தமிமுன்அன்சாரி, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் C.M முகமது இஸ்மாயில், ஹக்கீம் பாஷா, A.உமர் பாரூக், M.முஹம்மது பாரூக், M.ஜாஹிர் உசேன், S.நிஹாஸ், திருமாந்துறை அன்பரசன், P.Mசம்சுதீன், ஷாஜகான், பெரம்பலூர் அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் திரளாக பங்கேற்று கைதாகினர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் மாவட்ட செய்தி தொடர்பாளர் P.M சாகுல் ஹமீது வரவேற்றார். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #பெரம்பலூர்_மாவட்டம்.