சென்னை.நவ.28.., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (28.11.2019) பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில், சென்னையில் நடைப்பெற்றது. இதில் பொருளாளர் ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை.செல்லச்சாமி, மதுக்கூர்.ராவுத்தர்ஷா, மண்டலம்.ஜெய்னுலாபுதீன், தைமிய்யா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜ்தீன், ராசுதீன் ஆகியோரும் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு. தீர்மானம் 1: கடந்த நவம்பர்-9 அன்று பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது சட்டத்தின் அடிப்படையில் அமையாமல் நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. இனிவரும் பல வழக்குகளின் தீர்ப்புகளுக்கு இது தவறான முன்னோட்டமாக அமைந்து விட்டதே என்ற கவலையை இந்நிர்வாகக் குழு விரிவாக ஆய்வு செய்தது. ஜனநாயகம், அரசியல் சாசனசட்டம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கு இத்தீர்ப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல கோணத்திலும் இந்நிர்வாகக் குழு விவாதித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. https://m.facebook.com/story.php?story_fbid=2120599028039861&id=700424783390633 தீர்மானம்:2 கடந்த 1993 முதல் பாபர் மஸ்ஜித் வழக்கிற்காக நீதி கேட்டுப் போராடியவர்கள் இத்தீர்ப்பை கண்டு பதறிப் போய் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
Month:
நாகை உட்பட தமிழகத்திற்கு3 புதிய மருத்துவக் கல்லூரிகள்!! மு.தமிமுன்அன்சாரி_MLAவரவேற்பு!!
புதிதாக நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியிருப்பதை மஜக சார்பில் வரவேற்கிறோம், நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக நாகப்பட்டினத்திற்கு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் நான் இரண்டு முறை வலியுறுத்தி பேசியிருந்தேன். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி கிடைத்திருக்கிறது. இதனால் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக முன் முயற்சிகளை எடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார், அவர்களுக்கும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர், அவர்களுக்கும் மாவட்ட அமைச்சர் மாண்புமிகு OS.மணியன், அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு மு.தமிமுன்அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27.11.19
கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜகவின் கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா!
கோவை:நவ.27., கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்றுவிழா மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரிMLA,அவர்கள் கலந்து கொண்டு குனியமுத்தூர், குறிச்சிப்பிரிவு, ஆத்துப்பாலம், பகுதிகளில் கட்சி கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான்அமீர், தொழிற்சங்கமாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சுலைமான், முஸ்தபா, மற்றும் மாவட்ட, அணி நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 27.11.19
வீட்டுப்பணியாளர்கள் நலன் காக்கும் ஒன்று கூடல்..!
சென்னை.நவ.26.., வீடுகளில் வேலை செய்யும் வீட்டு பணியாளர்களின் நலன்களை காக்கும் ஒரு நாள் NGO அமைப்புகளின் மாநாடு சென்னையில் நடைப்பெற்றது. அவர்களுக்கான பணி வரையறை, முறையான சம்பளம் ஆகியன குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெல்ஜியம், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் சமூக ஆர்வலர்களும், வெளி மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MLA கலந்துக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை வழிமொழிந்து பேசினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 26-11-2019
அசோக்லேலண்ட் தொழிலாளர்களுடன் மாவீரர்தினம்..! தமிமுன்அன்சாரி MLA, தனியரசு_MLA பங்கேற்பு
எண்ணூர்.நவ.26.., இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகள் நினைவு நாள் உலகம் முழுக்க இன்று மாவீரர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று சென்னையில் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழ் இன உணர்வு கொண்ட தொழிலாளர்களால், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, மதிமுக-வின் தீர்மானக் குழு தலைவர் வழக்கறிஞர் ஆவடி அந் திரிதாஸ், இயக்குனர் புகழேந்தி, வழக்கறிஞர் கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மு.தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர், இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் தமிழர் வாழும் பகுதிகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, அங்கு மொழி, இன, மத சிறுபான்மையினரின் நலன்களை காக்க இந்திய அரசு தலையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் எழுதிய பாஸிஸ்டுகளை தோலுரிக்கும் "காந்தி 1 %" என்ற நூல் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நாசர், மாவட்டப் பொருளாளர் ஜாஃபர், அக்மல், திருவொற்றியூர் மேற்கு