You are here

நாகை உட்பட தமிழகத்திற்கு3 புதிய மருத்துவக் கல்லூரிகள்!! மு.தமிமுன்அன்சாரி_MLAவரவேற்பு!!

புதிதாக நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியிருப்பதை மஜக சார்பில் வரவேற்கிறோம், நன்றி தெரிவிக்கிறோம்.

குறிப்பாக நாகப்பட்டினத்திற்கு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் நான் இரண்டு முறை வலியுறுத்தி பேசியிருந்தேன்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி கிடைத்திருக்கிறது.

இதனால் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்காக முன் முயற்சிகளை எடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார், அவர்களுக்கும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர், அவர்களுக்கும் மாவட்ட அமைச்சர் மாண்புமிகு OS.மணியன், அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு

மு.தமிமுன்அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
27.11.19

Top