#மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) கத்தார் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் (PRS) சென்னை A. கஃதீர் அஹ்மத் +974 5529 0327 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 13.06.18
Month:
மஜக குடியாத்தம் நகரம் சார்பாக சஹர் நிகழ்ச்சி.
புனிதமிகு ரமலான் அதன் இறுதியை எட்டிவிட்டது. 27 நோன்புகள் கடந்து 28 நோன்பை நோற்றுள்ளோம். இந்த நிலையில் வேலூர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி குடியாத்தம் நகரம் சார்பாக சிறப்பு சஹர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ், குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ், நகர துணை செயலாளர் சலிம், அல்தாப், இன்சாப் மாநில துணை செயலாளர் ஆலியார் அத்தாவுல்லா மற்றும் பலர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #குடியாத்தம்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 13.06.2018
மஜக அடியக்கமங்கலம் நகரத்தின் சார்பில் பெருநாளை முன்னிட்டு அரிசி பைகள் விநியோகம்..!
திருவாரூர்.ஜூன்.13., திருவாரூர் மாவட்டம் #அடியக்கமங்கலம் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் அடியற்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, மொத்தம் தலா ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ கொண்ட பைகள் என 305 கிலோ அரிசி #61_குடும்பங்களுக்கு நோன்பு #பெருநாளை_முன்னிட்டு நேற்று (12.06.2018) மாலை மஜக நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. #மஜக கிளை பொருளாளர் நூர் மெய்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் ஒன்றிய செயலாளர் அடியற்கை ஹாஜா மெய்தீன் அவர்களும், மஜக அமீரக துணைச்செயலாளர் அடியற்கை லியாகத்அலி அவர்களும் கலந்துகொண்டு அரிசி பைகளை வழங்கினர். இதில் மஜக கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் உடனிருந்தனர். இதனை அறிந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அடுத்த வருடம் இன்னும் அதிகமான குடும்பங்களுக்கு இன்னும் பல பொருட்கள் சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_அடியக்கமங்கலம் #மஜக_திருவாரூர்_மாவட்டம்
அன்பால் மக்களை இணைப்போம்..! தோப்புத்துறையில் மஜக சார்பில் அனைத்து மக்களுக்கும் நோன்பு கஞ்சி வினியோகம்..!!
வேதை.ஜூன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் ரமலானில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நோன்பு கஞ்சியை வினியோகிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி நாகை (தெற்கு) மாவட்டம் தோப்புத்துறையில் மஜக சார்பில் பொதுமக்கள் கூடும் ஆறுமுகச்சந்தியில், இன்று நோன்பு கஞ்சி பிரத்யோகமாக காய்ச்சப்பட்டு சகோதர சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டது.பேருந்துகளில் செல்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், வாகன ஒட்டிகள் சிறுவணிகர்கள், அரசு ஊழியர்கள், என அனைவரும் அதை மகிழ்சியோடு பெற்று சென்றனர்.அதுபோல அதிகாரிகள், மருத்துவர்கள், முக்கிய பிரமுகளுக்கும் அவர்களின் வீடுகளுக்கு நோன்பு கஞ்சி கொடுத்தனுப்பப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக சமூக நல்லிணக்கம், புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வு அனைவராலும் வரவேற்க்கப்பட்டது.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
MKP தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல ஆலோசகராக புதுமடம் முகம்மது பைசல் (+974 5085 4704) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 12.06.18