கோவை.ஜன.01., கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாநகராட்சி 86 வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து யாரும் அந்த வழியில் நடந்து செல்லமுடியாத நிலையில் இருப்பதாகவும் மழை காலங்களில் பாம்புகள் வருவதாகவும் செய்தி வந்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியை மஜக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியர், அவர்களிடமும் மனு அளித்தனர் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து தற்போது அந்த பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று முடிக்கப்பட்டன. அந்த பணிகளை 86வது வார்டு செயலாளர் அரபாத் தலமையில், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் கண்காணித்தனர். இப்பணியில் அதிமுக 86வது வார்டு செயலாளர் சித்திக், தொண்டாமுத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் குஞ்சாலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களாக அந்த பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை பார்வையிட்டு சில நாட்களுக்குள்ளேயே அந்த பணிகளை நிறைவேற்றி தந்த 86 வது வார்டு மஜக நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 01.01.18
Month:
கொள்ளுமேடு நகர பொதுக்குழு மற்றும் முத்தலாக் தடை மசோதா எதிர்ப்பு கூட்டம்..!!
கடலூர்.ஜன.01., கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு நகர பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் J. நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிசம்பர் மாத வரவு செலவு கணக்குகளை நகர பொருளாளர் I. முஹம்மது பைசல் அவர்கள் சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதவை கண்டித்து மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் லால்பேட்டை முஸரப் உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் V.முஹம்மது ரியாஸ் அவர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தார். இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கொள்ளுமேடு_நகரம் #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
மஜக கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் கிழக்கு பகுதி நிர்வாகிகள் சந்திப்பு..!
கோவை.ஜன.01., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்வர், அவர்களை கிழக்கு பகுதி செயலாளர் சமீர், அவர்கள் தலமையில் பகுதி நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் கிழக்கு பகுதியின் அலுவலக திறப்பு விழா, கொடியேற்று விழா, புதிய கிளைகள் அமைப்பு, குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி பொருளாளர் அபு, துணை செயலாளர்கள் இக்பால், சாதிக் பாட்ஷா, அக்கீம், ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 31.12.2017
மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி நிர்வாக கூட்டம்..!
கோவை.ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதி நிர்வாக கூட்டம் பொருளாளர் S.A. காதர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில மினவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர், பகுதி செயலாளர் A.ஹாருண் ரஷீது, துணை செயலாளர்கள் அபுதாஹீர், நாசர், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல்ஹக்கீம், தொழிற்சங்க செயலாளர் அக்பர்கான், இளைஞரணி செயலாளர் அசாருதீன், துணை செயலாளர் ஜாபர்சாதிக், மீனவர் அணி செயலாளர் அன்வர்தீன், வழக்கறிஞர் அணி செயலாளர் பாதுஷா, மற்றும் நிர்வாகிகள் முஜிபூர்ரஹ்மான், அப்துல்காதர், ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் மேலும் முத்தலாக் விவகாரமாக ஆர்ப்பாட்டம் நடத்த கேள்விகள் எழுப்பப்பட்டன அதில் மாவட்டத்தில் அனுமதியும் பரிந்துரையும் பெற்ற பிறகே முடிவு செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 31.12.2017