கோவை.ஜன.01., கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாநகராட்சி 86 வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து யாரும் அந்த வழியில் நடந்து செல்லமுடியாத நிலையில் இருப்பதாகவும் மழை காலங்களில் பாம்புகள் வருவதாகவும் செய்தி வந்தது.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியை மஜக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியர், அவர்களிடமும் மனு அளித்தனர் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதை தொடர்ந்து தற்போது அந்த பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று முடிக்கப்பட்டன.
அந்த பணிகளை 86வது வார்டு செயலாளர் அரபாத் தலமையில், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் கண்காணித்தனர்.
இப்பணியில் அதிமுக 86வது வார்டு செயலாளர் சித்திக், தொண்டாமுத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் குஞ்சாலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீண்ட நாட்களாக அந்த பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை பார்வையிட்டு சில நாட்களுக்குள்ளேயே அந்த பணிகளை நிறைவேற்றி தந்த 86 வது வார்டு மஜக நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
01.01.18