தூத்துக்குடி.ஜூன்.25., நேற்று காயல்பட்டினத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது. இதில் மஜக-வின் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி அகமது மீரா தம்பி மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. காயல்பட்டினம் தூத்துக்குடி (தெ) மாவட்டம். #MJK_IT_WING 24.06.2017
Month:
ஈகையும், அன்பும் ஓங்கட்டும் ! மஜக ரமலான் வாழ்த்து !
( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாழ்த்துச் செய்தி) முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் உலகம் எங்கும் இருவேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது . சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி , சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பிருந்து , அதிகமாக இறைவழிபாடுகளில் ஈடுபட்டு, தேடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கி ரமலான் மாதத்தின் நிறைவாக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது . உள்ளங்களில் ஆன்மீக எழுச்சி, செயல்களில் பயிற்சியும் , அணுகுமுறைகளில் பயிற்சியும் ரமலான் தரும் பரிசுகளாகும் . இந்நன்னாளில் சகோதர சமுதாய மக்களோடு அன்பையும் , விருந்தோம்பலையும் பகிர்ந்துக் கொண்டு , நல்லிணக்கம் மேலும் , மேலும் வளர பாடுபட உறுதியேற்போம் . உலகமெங்கும் அன்பும் , அமைதியும் , மானுட ஒற்றுமையும் தழைத்தோங்கவும் , வறுமையும் , துயரமும் மறைந்து மகிழ்ச்சி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் . அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் ரமலான் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் . M. தமிமுன் அன்சாரி
வேலூர் மே மாவட்டம் குடியாத்தம் நகரம் IKP சார்பாக பிஃத்ரா விநியோகம்…
வேலூர்.ஜூன்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சார்பாக பிஃத்ரா விநியோகம் நிகழ்வு MBS நகரில் நகர மஜக செயலாளர் S.அணீஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் J.M.வசிம் அக்ரம். மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத், மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பித்ரா உணவு பொருட்கள் கொண்ட பிஃத்ரா பைகள் வழங்கப்பட்டது. மஜக நிர்வாகிகள் நிஜாமுதீன், ஆரிப், முபாரக் அஹமத், சலீம், இர்பான் முஹம்மத் கவுஸ், அல்தாப், பாலாஜி, முபாரக், முன்னா, ரஹமான் மற்றும் மாவட்ட, நகர, கிளை IKP மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. வேலூர் மே மாவட்டம், குடியாத்தம் நகரம். #MJK_IT_WING 24.06.2017
முகமது ரிஃபாத் ஷாரூக்…! தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தம்பி !
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) விலை குறைந்த கையடக்க செயற்கை கோளை தயாரித்து உலக அளவில் இந்தியாவுக்கும் , தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் பள்ளப்பட்டியை சேர்ந்த முகம்மது ரிஃபாத் ஷாரூக் என்ற மாணவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஏழைக் குடும்பத்தில் பிறந்து , இளம் வயதில் தந்தையை இழந்து , +2 தேர்வில் வெறும் 750 மதிப்பெண்களே எடுத்துள்ள நிலையில் , இம்மாணவர் நிகழ்த்திய இச்சாதனை பெரும் பாராட்டுக்குரியது . அறிவுக்கும் , மதிப்பெண்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் , அறிவு என்பது வர்க்கம் சார்ந்து வருவதில்லை என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது . அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கழகம் உலக அளவில் 8 ஆயிரம் மாணவர்களை சோதித்து இவரை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இச்செய்தியை சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் O.S.மணியன் அவர்களுக்கும் , இம்மாணவனுக்கு 10 லட்சம் ரூபாயை ஊக்கப்பரிசாக அறிவித்த முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் பாராட்டுக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் . இவண்
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு கொடுத்த மஜக பொதுச் செயலாளர்…!
சென்னை.ஜூன்.24., நேற்று பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய நீண்டநாள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும்படி சட்டசபை வளாகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்தனர். அனைவரையும் பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.செங்கோட்டையனிடம் தமிமுன் அன்சாரி அவர்கள் அழைத்து சென்றார்கள். சுமார் 15 நிமிடத்திற்கு சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் பிரச்சனைகளை முழுமையாக விளக்கினார்கள். அதை அனைத்தையும் கேட்ட அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து முழுமையாக கண்டறிய ஒரு கமிட்டி அமைப்பதாகவும், அந்த கமிட்டியின் கோரிக்கைகளை பரிசீலித்து செயல்படுத்துவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். தங்களின் நீண்டகால பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதிற்க்காக பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தெரிவித்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டமன்ற வளாகம். #MJK_IT_WING 23.06.2017