இன்ஷா அல்லாஹ்..எதிர்வரும் 2017, ஜனவரி 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் மனிதநேய காலாச்சரப் பேரவை சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுபினருமான #M_தமிமுன்_அன்சாரி.MLA அவர்கள் பங்குபெரும்... மாபெரும் "சமூக நல்லிணக்க மாநாடு" அனைத்து சமுதாய மக்களையும் வருக, வருக என அன்புடன் அழைக்கிறது மனிதநேய கலாச்சார பேரவை ஐக்கிய அரபு அமீரகம். தகவக் : ஊடகபிரிவு யூ.ஏ.யி
Month:
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து தலைநகர் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு பள்ளிவாசல் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், அடையாறு பள்ளி தலைவர் சதுதீன் பாகவி, மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தொல். திருமாவளவன், முஸ்லீம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP, ஹாரூண் Ex.MP, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உரையின் சுருக்கம் பின்வருமாறு: வர்தா புயலால் இந்த போராட்டம் நடக்குமா? என நினைத்தோம். இறைவனின் நாட்டத்தால் இது நடக்கிறது. புயல் பேருந்துகளை புரட்டிப் போடலாம். நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எரியலாம். அது நமது ஈமானை புரட்டிப் போட முடியாது. அதனால்தான் இவ்வளவு நெருக்கடியிலும் கூட்டம் திரண்டுள்ளது. 3 நாட்களாக மொபைல் போன்கள் வேலை செய்யவில்லை. யாரும் யாரையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை. வாகனங்கள் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஷரியத்திற்காக மக்கள் திரண்டு இருக்கிறார்கள். இது போன்ற எழுச்சிதான் மோடியின் அரசியலுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும். மோடியால் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரமுடியாது. RSSன் வழிகாட்டி கோல்வால்கர் 1972 ஆம் ஆண்டு டெல்லியில்
வர்தா புயலின் பாதிப்பு மீட்ப்பு பணியில் மஜக சொந்தங்கள்
டிச.23 குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் “சமூகநீதி மாநாடு “
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை *தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கில்* நடைபெறுகிறது. சமூக நீதி மாநாட்டில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து தர அன்போடு அழைக்கிறது. அழைப்பின் மகிழ்வில் *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail:mjkkuwait@gmail.com
தேவநேரி கிராம மீனவ இளைஞர்கள் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.
டிச.12., கடந்த 11.12.2016 அன்று காஞ்சி தெற்கு மாவட்டம் தேவநேரி (மகாபலிபுரம்) கிராம மீனவ இளைஞர்கள் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம், திருவெற்றியூர் பகுதி 1 வது வட்டச் செயலாளர் இப்றாகீம் மற்றும் மீனவரணிச் செயலாளர் யுவராஜ் முயற்சியில் இந்த இணைப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.