நேற்று மதுரையில் தந்தி தொலைகாட்சி சார்பில் பொது சிவில் சட்டம் என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு பரபரப்பான சூழலில் நடைபெற்றது. சி.பி.ராதாகிருஷ்ணன் (BJP), M.தமிமுன் அன்சாரி MLA (MJK), சுதர்சன நாச்சியப்பன் (காங்), ஆசிர்வாதம் ஆச்சாரியா (RSS), சமூக செயல்பாட்டாளர்கள் பாதிரியார் ஜெகத் கஸ்பர், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். பதட்டமான தலைப்பு என்பதால் உளவுத்துறை ஏக டென்ஷனில் இருந்தது. அரங்கத்தில் தனி அறைக்கு பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி சென்றதும், பாண்டே அவர்கள் கட்டிப்பிடித்து, MLA ஆனதற்கு வாழ்த்து கூறினார். அவரது அரசியல் நகர்வுகள் குறித்து பாராட்டினார். அப்போது அங்கிருந்த ஜெகத் கஸ்பர், உங்கள் பணிகளை அன்றாடம் சோசியல் மீடியாவில் கவனிக்கிறேன். சிறப்பாக செயல்படுகிறீர்கள் என பொது செயலாளரிடம் கூறினார். நிகழ்ச்சி தொடங்கிய போது பொதுச் செயலாளருக்கு அறிமுகம் கொடுத்த பாண்டே, தான் முன்பு இருந்த கட்சிக்கு MLA இல்லாமல் செய்வது எப்படி? இப்போது தான் இருக்கும் கட்சிக்கு MLA வை எப்படி பெற்று கொடுப்பது என்ற வித்தையை கற்றவர் என்றதும் கைதட்டல் எழுந்தது. முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் ஆதரவை பெற்றவர். அம்மா அவர்களின் அன்பை
Month:
ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மஜக நடத்தும் கையெழத்துப் போர் துவக்கம்…
ஈரோடு மாநகர் மாவட்டம், சுல்தான் பேட்டை பள்ளி வாசலில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி நடத்தும் கையெழத்துப் போர் 21.20.2016 முதல் 4.11.2016 வரை மக்களை சந்திப்போம் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் A.ஷபிக் அலிதலைமை தாங்கி தொடங்கி வைத்தார் . மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது,முஸ்தபா மற்றும் மாவட்ட அரசு காஜி ஹாஜி கிபாயத்துல்லாஹ் பாகவி,பள்ளி இமாம் அப்துல் சமது ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முகமது அலி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கிளை பொருப்பாளர்கள்,ஊர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாலர் ஜாபர் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது. தகவல்: மஜக ஊடகபிரிவு ஈரோடு மாநகர் மாவட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் மஜக சார்பில் பொது சிவில் சட்டத்திற்க்கு எதிரான கையேழுத்து போர் துவக்கம்…
மதுரையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பரிப்பு! மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டத்தில் முடிவு!
நேற்று (23.10.2016) மதுரை மாநகரில் அனைத்து ஜமாத் கூட்டம் நடைப்பெற்றது. அதில் அனைத்து தரப்பையும் இணைத்து வரும் 7.11.16 அன்று மதுரையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி_MLA கலந்துக் கொண்டு எழுச்சியுரையாற்றினார். 125 ஜமாத்துக்கள் இணைவதால் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் 25 ஆயிரத்திர்க்கும் அதிகமானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் ஏற்படாகியுள்ள இந்நிகழ்வு பல நகரங்களிலும் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் மதச்சார்பற்ற, அனைத்து சமூக தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்: மஜக_ஊடகப் பிரிவு மதுரை மாவட்டம்.
எழுச்சியோடு தொடங்கியது மஜகவின் கையெழுத்து இயக்கம்!
அக்.21., பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரத்துடிக்கும் மத்திய அரசின் போக்குக்கு மனிதநேய ஐனநாயக கட்சி 'கையெழுத்துப் போர்' என்ற தலைப்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா சிறப்புத் தொழுகைக்குப் பிறகு நாகப்பட்டினம் மரைக்காயர் ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முதல் கையெழுத்துப் போட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நாகை ஐமாத் தலைவர் ஹபிபுல்லா, மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட செயலாளர் ரியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுமார் 45 நிமிடம் நடைப்பெற்ற இந்நிகழ்வில் 1372 பேர் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீடு, வீடாக சென்று மஜக வினர் கையெழுத்துப் போரை முன்னெடுக்க உள்ளனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு.