அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் தமிமுன் அன்சாரி தந்தி டிவி பாண்டே பாராட்டு…

நேற்று மதுரையில் தந்தி தொலைகாட்சி சார்பில் பொது சிவில் சட்டம் என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு பரபரப்பான சூழலில் நடைபெற்றது.

சி.பி.ராதாகிருஷ்ணன் (BJP), M.தமிமுன் அன்சாரி MLA (MJK), சுதர்சன நாச்சியப்பன் (காங்), ஆசிர்வாதம் ஆச்சாரியா (RSS), சமூக செயல்பாட்டாளர்கள் பாதிரியார் ஜெகத் கஸ்பர், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

பதட்டமான தலைப்பு என்பதால் உளவுத்துறை ஏக டென்ஷனில்  இருந்தது.

அரங்கத்தில் தனி அறைக்கு பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி சென்றதும், பாண்டே அவர்கள் கட்டிப்பிடித்து, MLA ஆனதற்கு வாழ்த்து கூறினார். அவரது அரசியல் நகர்வுகள் குறித்து பாராட்டினார்.
அப்போது அங்கிருந்த ஜெகத் கஸ்பர், உங்கள் பணிகளை அன்றாடம் சோசியல் மீடியாவில் கவனிக்கிறேன். சிறப்பாக செயல்படுகிறீர்கள் என பொது செயலாளரிடம் கூறினார்.

நிகழ்ச்சி தொடங்கிய போது பொதுச் செயலாளருக்கு அறிமுகம் கொடுத்த பாண்டே, தான் முன்பு இருந்த கட்சிக்கு MLA இல்லாமல் செய்வது எப்படி? இப்போது தான் இருக்கும் கட்சிக்கு MLA வை எப்படி பெற்று கொடுப்பது என்ற வித்தையை கற்றவர் என்றதும் கைதட்டல் எழுந்தது.

முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் ஆதரவை பெற்றவர். அம்மா அவர்களின் அன்பை பெற்றவர் என்றதும் மீண்டும் ஒலித்த கைதட்டல் ஓய நீண்ட நேரம் பிடித்தது.

பிறகு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது. பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA பேச வந்தபோது,

மொழியால் தமிழன்,
கொள்கையால் இஸ்லாமியன்,
தேசத்தால் இந்தியன் என்ற உணர்வோடு இங்கு பேச . வந்திருக்கிறேன் என்றதும் அரங்கம் கையொலியால் அதிர்ந்தது.

தலாக் என்றால் என்ன?
பலதார மணத்தை முஸ்லிம்கள் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்?
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள்,
அரசியல் சாசன அறிவுரைகள்
என அனைத்தையும் புள்ளி விவரங்களோடு, ஆணித்தரமாக, தனக்கே உரிய பாணியில் எடுத்துக் கூறி BJP, RSS கருத்துக்களை அடித்து நொறுக்கினார்.

ஒரு கட்டத்தில் பாஜக வினரும் சேர்ந்து கைதட்டினர். எல்லோர் பேச்சிலும் குறுக்கீடு செய்த பாண்டே, பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியின் அவர்களின் வாதங்களை பார்த்து, குறுக்கிடாமல் கவனித்தப்படியே இருந்தார்.

இது பாண்டேவுக்கே புதிய அனுபவம் எனலாம். பாண்டேயை தொடர்ந்து பார்பவர்களுக்கும் அது நன்றாகவே புரிந்தது.

கடைசி சுற்றும் எதிர்பாராதபடி பொதுச் செயலாளருக்கே வாய்ப்பு கிடைக்க அவர் மதவெறிக்கு எதிராக வெளுத்து வாங்கினார்.

நிகழ்ச்சி முடிந்ததும்,
பா.ஜ.க தலைவர் C.P.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை கட்டிப்பிடித்து, “முஸ்லிம் சமூகத்தில் ஒரு புரட்சியாளராக உங்களை பார்க்கிறேன். வாழ்த்துக்கள்” என்றார்.

ஆக, பாஜக வினருடைய மனதையே மாற்றக் கூடிய அளவிற்கு பொதுச் செயலாளர் அவர்களின் வாதங்கள் அமைந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அவர்கள் பொதுச் செயலாளரிடம் சமுதாய உணர்வோடு, தேசப்பற்றையும், பொது தளத்தையும் அரவணைத்து பேசினீர்கள் என்றார்.

ஜெகத் கஸ்பரும், சுதர்சன நாச்சியப்பனும் மிகச் சிறப்பான பேசினீர்கள் என்றனர்.

கீழே இறங்கி வந்ததும் தந்தி டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், “நீங்கள் தான் நிகழ்ச்சியின் ஹைலைட்” என்றனர். பார்வையாளர்கள், BJP யினர் உட்பட திரண்டு வந்து கை கொடுத்தனர்.

கடைசியாக விடைபெறும் போது, பாண்டே, பொதுச் செயலாளரிடம் கைக் குலுக்கி “மிகச் சிறப்பாக செய்தீர்கள்” என மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

தந்தி தொலைக்காட்சியில் வரும் சனி, ஞாயிறு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் போது அது தமிழ் சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதில் ஐயமில்லை.

இவண்,
K.M. முகம்மது மைதீன் உலவி,
23.10.2016