கடந்த 07.10.2016 அன்று நாச்சிகுளத்தில் அல் அய்ன் மண்டல செயலாளர் சகோ. அசாலி அஹமது அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்ற சந்திப்பில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமீமுன் அன்சாரி M.A. M.L.A அவர்களை துபாய், ஷார்ஜா, அல் அய்ன், அபுதாபி, அஜ்மான் மண்டலங்களின் அமீரக நிர்வாகிகள் சந்தித்து அமீரக செயல்பாடு மற்றும் எதிர் கால திட்டங்கள் குறித்து விவாதித்தனர். உடன் மாநில செயலாளர் சகோ. நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது. 1. அமீரகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல். 2. அமீரக தொடர்பாளராக தலைமையின் சார்பாக ஒருவரை நியமித்தல். 3. அமீரக நிர்வாகத்தை அமீரக செயலாளர் தலைமையில் மறுசீரமைத்தல் ஆகியவை. தகவல் : மஜக ஊடகபிரிவு
வளைகுடா
வளைகுடா
குவைத் மனிதநேய கலாச்சார பேரவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய சுதந்திர இந்தியா கருத்தரங்கம்…
ஆக.13.,குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* 12/08 2016 (வெள்ளி) அன்று முர்காப் அலி டவரில் *வள்ளல் ஹபீப் முஹம்மது அரங்கத்தில்* சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை *மண்டல செயலாளர் முத்துகாபட்டி ஹாஜாமைதீன்* அவர்கள் தலைமை ஏற்க்க *மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ்* அவர்கள் தொகுத்து வழங்கினார், ஆரம்பமாக *புத்தாநத்தம் கான் இக்பால் ஃபாஜில் மன்பயி* அவர்கள் கிராஅத் ஓதி துவக்கிவைக்க *மண்டல து. செயளாலர் சகோ. அதிரை பைசல் அஹமது* அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார் முன்னிலையாளர்களாக *சகோ. Dr. S.M. ஹைதர் அலி அவர்கள் (TVS HYDER GROUP),* சகோ. *M.சாதிக்* அவர்கள் (லிட்டில் இந்தியா புரோமோட்டர்ஸ்), *சகோ. A.J. மத்தினுல்லாஹ்* அவர்கள் (ARIYAFAL-KHALEEJ GROUPS), *சகோ. M.Y.முகம்மது கவுஸ்* அவர்கள் (வெல்டன் ரியல் புரோமோட்டர்ஸ்), *சகோ. M.சாஹின் ஷா* அவர்கள் (NQG சமூக ஆர்வலர்), *சகோ. S. சாதிக்* அவர்கள் (அல் அவ்தா தச்சுப்பட்டறை), *சகோ. H.முஷாவுதீன் (மண்டல ஆலோசகர் மஜக)* ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மனிதநேய கலாச்சார பேரவையின் கழக பேச்சாளர்கள் உரையாற்றினர் இதை தொடர்ந்து குவைத்தில் இயங்ககூடிய
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக நடத்தும் “சுதந்திர இந்தியா” கருத்தரங்கம்…
இறைவனின் திருப்பெயரால்... *குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* சார்பாக நடத்தும் *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* நிகழ்ச்சி குவைத்தில் இயங்ககூடிய அனைத்து தமிழ் இயக்க, அமைப்பு நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்திய சுதந்திரம் பற்றிய தங்களது கருத்தாய்வை வழங்க இருக்கிறார்கள் அனைவரும் தவராது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். நாள் : 12/08/2016 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6:00 மணிக்கு இடம் : பாரகான் உணவகம், அலி டவர், முர்காப் (KPTC பஸ்நிலையம் பின்புறம்) இவண், மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம், 55278478, 55260018, 60338005
ஈகை பெருநாள் வாழ்த்துகள்…
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை கல் மனம் கொண்டவர்களையும் பொன்மனம் கொண்டவர்களாக மாற்றிடும் இனிய மாதம்தான் ரமலான் இம்மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல் இறையச்சத்தோடு நோன்பு நோற்று உள்ளத்தையும் உணர்வையும் ஒழுங்குபடுத்திடும் இனையற்ற பயிற்சியை உலகம் முழுதும் முஸ்லிம்கள் பெறுகிறார்கள் தனக்காகவும் பிறருக்காகவும் பசியோடு மனம் உருகி ஒவ்வொருவரும் செய்யும் பிரார்தனைகளும் திருக்குஆனின் பக்கங்களில் விழிகளை புதைத்துக் கொள்ளும் அனுபவங்களும் வார்த்தைகளில் வர்னிக்க முடியாத பரவசத்தை இம்மாதம் முழுதும் தருகின்றன இம்மாதத்தின் நிறைவில் அந்தி சாயும் பொன்மாலை பொழுதில் வானத்தில் வளைந்த கவிதையாய் தென்படும் பிறையை பார்த்த மகிழ்ச்சியில் ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாளை கொண்டாட உலகமெங்கும் முஸ்லிம்கள் தயாராகிறார்கள் புத்தாடைகளையும், வாசனை திரவியங்களையும், மனம் வீசும் ருசிகர உணவுகளையும்தாண்டி இறைவனை புகழ்பாடி தொடங்கும் பெருநாள் தொழுகையும், அங்கே ஒருவரையொருவர் பகை மறந்து, மனமுவந்து, கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை கூறும் உணர்ச்சிமயமான நிகழ்வுகள் இந்த நாள் மீன்டும் எப்போது வரும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன அன்றைய தினம் அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் அள்ளி,
அமீரகம் அஜ்மானில் மனிதநேய கலாச்சார பேரவை துவக்கம்…
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகச் சிறிய பகுதியான #அஜ்மான் அமீரக பகுதி பாரசிக குடாவை ஒட்டி அமைந்துள்ளது. #மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக விளங்கும் #மனிதநேய_கலாச்சார_பேரவை அஜ்மான் நகரில் இறைவன் அருளால் துவங்கப்பட்டது. அமீரக து.செயலாளர் #முகமது_அலி_ஜின்னா தலைமையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் அமீரக செய்தி தொடர்பாளர் #அபுல்_ஹசன், ஷார்ஜா மண்டல செயலாளர் #அடியற்கை_யூசுப்தீன் ஆகியோர் மஜகவின் செயல்பாடுகளை அமீரகத்தில் ஆற்றி வரும் பணிகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினர். அதன் பின் ஏகமனதாக அஜ்மான் மண்டல நிர்வாகம் அமைக்கப்பட்டது. அஜ்மான் மண்டல செயலாளராக #குத்தாலம்_முகமது_செல்லப்பா 0562159742 மண்டல பொருளாளராக #குடந்தை_சாகுல்_ஹமீது 0552458005 துணை செயலாளர்களாக: #சேக்_முகைதீன் #வவ்வாலடி_சேக்_அலாவுதீன் #திருத்துறைபூண்டி_அப்துல்_கபூர் மண்டல ஆலோசகராக #கட்டிமேடு_பஷீர்_அஹமது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் லால்பேட்டை - M.ஜியாவுதீன் தோப்புத்துறை- M.சாகுல் ஹமீது தோப்புத்துறை - H.ரிஜிவான் உசேன் விருதாசலம் - S.முகமது உசேன் அய்யம்பேட்டை - s.முஹம்மது பைசல் கடியேச்சேரி - S.ஜெகபர் சாதிக் புஷ்பாவனம் - S.முஜிபுதீன் ஆகிய செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். #எல்லா_புகழும்_இறைவனுக்குகே.. - மஜக ஊடகப்பிரிவு