மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
கல் மனம் கொண்டவர்களையும் பொன்மனம் கொண்டவர்களாக மாற்றிடும் இனிய மாதம்தான் ரமலான் இம்மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல் இறையச்சத்தோடு நோன்பு நோற்று உள்ளத்தையும் உணர்வையும் ஒழுங்குபடுத்திடும் இனையற்ற பயிற்சியை உலகம் முழுதும் முஸ்லிம்கள் பெறுகிறார்கள்
தனக்காகவும் பிறருக்காகவும் பசியோடு மனம் உருகி ஒவ்வொருவரும் செய்யும் பிரார்தனைகளும் திருக்குஆனின் பக்கங்களில் விழிகளை புதைத்துக் கொள்ளும் அனுபவங்களும் வார்த்தைகளில் வர்னிக்க முடியாத பரவசத்தை இம்மாதம் முழுதும் தருகின்றன
இம்மாதத்தின் நிறைவில் அந்தி சாயும் பொன்மாலை பொழுதில் வானத்தில் வளைந்த கவிதையாய் தென்படும் பிறையை பார்த்த மகிழ்ச்சியில் ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாளை கொண்டாட உலகமெங்கும் முஸ்லிம்கள் தயாராகிறார்கள்
புத்தாடைகளையும், வாசனை திரவியங்களையும், மனம் வீசும் ருசிகர உணவுகளையும்தாண்டி இறைவனை புகழ்பாடி தொடங்கும் பெருநாள் தொழுகையும், அங்கே ஒருவரையொருவர் பகை மறந்து, மனமுவந்து, கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை கூறும் உணர்ச்சிமயமான நிகழ்வுகள் இந்த நாள் மீன்டும் எப்போது வரும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன
அன்றைய தினம் அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்
அள்ளி, அள்ளி கொடுக்கும் ஈகை குணம் பெருநாள் வழங்கும் சமூக நீதி மகிழ்ச்சியாகும்.
இந்த இனிய நாளில் உலகமெங்கும் அமைதிப் பூக்கள் மலரவும் நமது நாடும்,மக்களும் எல்லா வளங்களையும் பெறவும், நல்லிணக்கம் வலிமை பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இனிய ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
M.தமிமுன் அன்சாரி,MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி