கத்தார்.ஜன.01., கத்தார் அல் சத் தோஹா (Al Sadd Doha) என்கிற பகுதியில் நேற்று (31.12.2017) மண்டல செயலாளர் பொறியாளர் அ.முஹம்மத் உவைஸ் தலைமையில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை தொடங்கப்பட்டது. இதில் கீழ்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். கிளைச்செயலாளர்: மு.செய்யது சுல்தான் இப்ராஹிம் சின்னமனூர் +97477135886, கிளைபொருளாளர் : பாபு என்கிற ஜவஹர் அலி மயிலாடுதுறை +97455349865, கிளை துணைச் செயலாளர்கள்: முஹம்மது ஃபாருக் கும்பகோணம் +97466047217, ரப்சல் பைசல் மேல்விஷாரம் +97470165521, தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம். 01.01.2018
வளைகுடா
வளைகுடா
கத்தார் மண்டல MKPயின் நிர்வாக ஆலோசனை கூட்டம்…!
தோஹா.டிச.31., மனிதநேய கலாச்சார பேரவையின்(MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் கடந்த 28.12.17 அன்று நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார். மண்டல IT WING செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார், மண்டல ஒருங்கிணைப்பாளர் KST அப்துல் அஜிஸ், மண்டலச் துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின், PRO வாஜீத், வர்த்தக அணி செயலாளர் சேக் முஹய்தீன், தொண்டரணி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டு பணி குறித்து முதல்கட்ட வேலையை துவங்கப்பட்டு, பின்பு நிதி கட்டமைப்பு, கிளை நிர்வாகிகளை சந்திப்பது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் தொடர்புக்கு : +974 55734012 28.12.2017
கத்தார் மண்டலம் MKPயின் புதிய இரண்டு கிளை உதயம்..! தமுமுகவின் IQIC இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டு MKPயில் இணைந்தனர்..!!
தோஹா.டிச.26., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் கடந்த 24/12/2017 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் அவர்கள் தலைமையில் சனயா (Sanaya-39 Almillion) மற்றும் சஹானியா (Sahaniya- Almillion) ஆகிய பகுதிகளில் புதிய இரண்டு கிளைகள் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமுமுகவின் கத்தார் மண்டல கிளை அமைப்பான IQICஇல் இருந்து விலகி இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டடு மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தனர். இதில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மண்டலா நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர். தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் +97455734012 25.12.2017
தமுமுகவின் கத்தார் அமைப்பான IQIC லிருந்து மஜகவில் இணைந்தனர் !!
கத்தார்.டிச.19., கத்தார் மண்டலத்தில் தமுமுகவின் கிளை அமைப்பு IQIC என்ற பெயரில் இயங்கி வந்தது. இதில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றிய சகோதர் முன்னாள் மக்கள் தொடர்பாளர், முன்னாள் செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ் தலைமையில் 20 சகோதர்களுடன் இன்று மஜக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி அவர்கள் முன்னிலையில் மஜகவின் கிளை அமைப்பான கத்தார் மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தார்கள். தகவல்; #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #MKP_கத்தார்_மண்டலம் 19.12.2017.
MKP துபை மண்டலம் ஹோரல் அன்ஸ் பகுதியின் ஆலோசனை கூட்டம்..!
துபாய்.டிச.17., துபை மண்டல மனிதநேய கலாச்சார பேரவை ( MKP) ஹோரல் அன்ஸ் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துபை மண்டல செயலாளர் யூசுப்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துபை மண்டல பொருளாளர் லால்பேட்டை சபீக் மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் கட்டிமேடு ஜாகீர், ஹம்தான், காயல் சபீர், அல் கூஸ் பகுதி செயலாளர் சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமீரக துணைச் செயலாளர் அப்துல் ரெஜாக், அமீரக ஊடக பிரிவு செயலாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். ஹோரல் அன்ஸ் பகுதி பொறுப்பாளர் பேராவூரணி ஆரிப் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார். தகவல்; #MKP_ ஊடக_பிரிவு #மனிதநேய_கலாச்சார_பேரவை #MKP_துபை_மண்டலம். 15.12.17