பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

120 வேன்களில் பங்கேற்க நாகை மாவட்டம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

ஜனவரி.17.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளரராக மாநில துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகளுக்கு நிரந்தர விடுதலை கோரி தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற பிப்ரவரி-10, 2024 அன்று மஜக தலைமை சார்பில் திருச்சியில் மாபெரும் மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்திற்கு நாகை மாவட்டத்தின் சார்பில் 120-க்கும் மேற்பட்ட வேன்களில் மக்களை திரட்டி அழைத்து செல்வது எனவும்..

வருகிற ஜனவரி-26 குடியரசு தினத்தன்று தோப்புத்துறையில் அவசரகால ஊர்தி சேவையை (ஆம்புலன்ஸ்) மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MA, ex MLA அவர்களால் ஊர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய மாவட்ட அவைத் தலைவராக சதக்கத்துல்லாஹ் அவர்கள் அனைத்து நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் மன்சூர், திருப்பூண்டி ஷாகுல் ஹமீது,மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர்கள் அஹமதுல்லாஹ், பாலமுரளி, கண்ணுவாப்பா (எ) ஷாகுல் ஹமீது, பேபி ஷாப் பகுருதீன், MJTS மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரிஃபாய், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் திருப்பூண்டி ஷாகுல் ஹமீது, இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பிரவீன் குமார், MJTS மாவட்ட துணை செயலாளர் ஆதீனங்குடி சாகுல், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அனிஸ், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், நாகை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம், நாகூர் நகர நிர்வாகிகள் ஷாகுல் ஹமீது, யாசர் முகமது சுஹைல், நாகை நகர துணை செயலாளர் செலலத்துரை (எ)அப்துல் காதர், தெத்தி கிளை செயலாளர் சாதிக், திருப்பூண்டி கிளை துணை செயலாளர் ஜியாவுதீன், வேதை நகர நிர்வாகிகள் அவுலியா முகமது, அப்துல் மாலிக்,M.A.சர்புதீன், சதாம் உசேன், திருமருகல் ஒன்றிய நிர்வாகிகள் சுரேந்தர், சீர்காழி உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
16.01.2024.