சென்னை.ஜன.11., சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று (11-01-2018) பேசினார். அவரது உரையின் துவக்கமாக அனைவருக்கும் பொங்கல் முன் வாழ்த்துக்களை கூறினார். பிறகு மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்ற பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்தை எடுத்துக்கூறி, இதில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், இதனை விட்டுக்கொடுப்பவர்களை தமிழக மக்கள் விட்டுக் கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார். முத்தலாக் மசோதாவிற்கு தமிழக அரசு துணிச்சலோடு எதிர்ப்பு தெரிவித்ததற்கும், கடந்த டிசமபர் 7 ம் தேதி, தான் முதல்வர் எடப்பாடியார் அவர்களை சந்தித்தபோது அவரிடம் கேட்டுக்கொண்ட பின் மத்திய அரசுக்கு எதிராக, முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் நிலைப்பாடு எடுத்ததற்காக தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்யப்படுவதாக, திண்டுக்கல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவுப்பு செய்ததற்காக தனது நன்றிகளை கூறியவர், இதில் சாதி, மத, வழக்கு பேதமின்றி சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இதில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "அந்த குடும்பங்களை நீங்கள் 5 நிமிடம் சந்தித்து பேசினால் அவர்களது
தமிழகம்
தமிழகம்
மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
ஈரோடு.ஜன.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (10.01.18) நடைபெற்றது. மஜக மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின்ஷா தலைமையிலும், மாவட்ட பொருப்புக் குழு தலைவர் ஈரோடு எக்சான், பொருப்புக் குழு உறுப்பினர்கள் நிஜாமுதீன், மார்க்கெட் நாசர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 பகுதிகளில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. பகுதிசெயலாளர்: A.முஹம்மது ஹாரிஸ், பகுதிபொருளாளர்: ஆனந்த், துணைச் செயலாளர்: B.இளங்கோவன், இளைஞரணி செயலாளர்: M.அப்துல் அஜீஸ், மாணவர் இந்தியா செயலாளர்: சுஹைல் முஹமது பாஷா, தொழிற்சங்க செயலாளர் : S. அப்துல் சமது, வர்த்தக சங்க செயலாளராக: ஆறுமுகம், இஸ்லாமிய கலாச்சார பேரவை: செயலாளராக B.முபாரக் அலி, சுற்றுச் சூழல் அணி செயலாளராக: M. இர்பான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_ஈரோடு_கிழக்கு_ மாவட்டம். 10-01-2018
மஜக தலைமை நியமண அறிவிப்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக வழக்கறிஞர் சங்க செயலாளராக காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமனன் அவர்களது மகன் #அஹமது_ஜெய்லானி_MABL (8072716228) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவன்; M_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 09-01-2018
நீட் போராட்ட வழக்கு..! மஜக பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் விடுதலை..!!
சென்னை.ஜன.09., அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சகோதரி அனிதா (தற்) கொலை செய்து கொண்டார். சகோதரி அனிதாவின் படுகொலையை கண்டித்து கடந்த ( 03.09.2017 ) அன்று சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போராட்டம் நடத்த மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமையில் மெரினாவை நோக்கி பேரணியாக சென்றபோது காவல் துறையினர் தடுத்து மஜகவினரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா , மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரவுஃ ரஹிம் , திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் செயலாளர் பஷீர் அஹமது, ஜாவித் ஜாபர் மற்றும் லத்திப் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று (09.01.2018) எழும்பூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் சதாத் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தையும், சமுதாய அக்கறையுடன் நடைபெற்றதாகவும்
மஜக மதுரை வடக்கு மாவட்ட ஆலோனை கூட்டம்..!
மதுரை.ஜன.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மஜக மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில துணைச் செயலாளர் (மாவட்ட பொறுப்பாளர்) முஹம்மது சைஃபுல்லா ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் உமர் பாருக், பொருளாளர் ஜபர்லால் மற்றும் துணைச் செயலாளர்கள்,மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம். 09.01.2018