மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) திருப்பூர் மாவட்ட செயலாளராக, சையது இப்ராஹீம் த/பெ; சேக்அலி குலாம் காதர் கார்டன், 7வது வீதி, ஜீ.கே, கார்டன் பள்ளிவாசல், பின்புறம் திருப்பூர்-641603 அலைபேசி; 9042423782 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; M.H.ஜாபர் அலி பொறுப்பாளர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 22.03.2024.
தமிழகம்
தமிழகம்
கோவை INDIA கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக நிர்வாகிகள் பங்கேற்பு…
மார்ச்.22., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையிலான நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், I.N.D.I.A கூட்டணியின் சார்பில் கோவையில் போட்டியிடும் திரு. கணபதி ராஜ்குமார் அவர்களின் வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தீவிரமாக களப்பணியாற்றும் என்று பேசினார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, டி.ஆர்.பி. ராஜா, திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மஜக மாநில இளைஞர் அணி பொருளாளர் PMA.பைசல், மாவட்ட பொருளாளர் சிங்கை சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஹனீபா, ஜாஃபர் சாதிக், அன்வர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் ஜாகீர், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், மாவட்ட
அரவிந்த் கெஜ்ரிவால் கைது! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்…
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதல்ல. அப்படி அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருந்தால், முதலில் பாஜக தலைவர்களை நோக்கித்தான் படையெடுக்க வேண்டும். I.N.D.I.A கூட்டணியின் ஏறுமுகம் பாஜகவை திணறடித்து வருகிறது. இதனால் பிரதமர் மோடி அரசியல் பதட்டத்தில் இருக்கிறார் என்பதையே இந்த கைது மூலம் உணர முடிகிறது. மனிதநேய ஜனநாயக கட்சி இந்த கைதை கண்டிக்கிறது. இதற்கு மக்கள் தேர்தல் வழியாக சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம். இக்கைது சம்பவம் ஜனநாயக சக்திகள் மேலும் வலிமையுடன் அணி திரளக் கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது என்பதே நிதர்சனமாகும். இவண், மு.தமிமுன் அன்சாரி, தலைவர் மனித நேய ஜனநாயக கட்சி 22.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… ஈரோட்டில்… அமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…
மார்ச்.22., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு மாவட்ட திமுக செயலாளரும், மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சருமான திரு. சு.முத்து சாமி அவர்களை மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அலி தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்டத் துணைச் செயலாளர் ரியாஸ் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திலிப் குமார், துணை செயலாளர் தினகரன் அக்ரஹாரம் பகுதி செயலாளர் ஜாவித்,மற்றும் வெங்கடேஷ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 21.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… வேலூரில்… திமுக மாவட்ட செயலாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…
மார்ச்.21., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மாவட்ட திமுக செயலாளர் திரு. ஏ.பி.நந்தகுமார் அவர்களை மஜக வேலூர் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ராம், மாவட்ட துணை செயலாளர் அஸ்லம் ஷெரிஃப், இளைஞர் அணி செயலாளர் நபிஸ் ரஹ்மான், நகர செயலாளர் சையது தாவூத், துணை செயலாளர் கவுஸ் பாஷா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 21.03.2024.