நாடாளுமன்ற தேர்தல் 2024… ஈரோட்டில்… அமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…

மார்ச்.22.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு மாவட்ட திமுக செயலாளரும், மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சருமான திரு. சு.முத்து சாமி அவர்களை மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அலி தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்டத் துணைச் செயலாளர் ரியாஸ் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திலிப் குமார், துணை செயலாளர் தினகரன் அக்ரஹாரம் பகுதி செயலாளர் ஜாவித்,மற்றும் வெங்கடேஷ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
21.03.2024.