மார்ச்.21.,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மாவட்ட திமுக செயலாளர் திரு. ஏ.பி.நந்தகுமார் அவர்களை மஜக வேலூர் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் ராம், மாவட்ட துணை செயலாளர் அஸ்லம் ஷெரிஃப், இளைஞர் அணி செயலாளர் நபிஸ் ரஹ்மான், நகர செயலாளர் சையது தாவூத், துணை செயலாளர் கவுஸ் பாஷா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
21.03.2024.