சேலத்தில் தொடரும் எழுச்சி! மஜகவில் திரளானோர் இணைந்தனர்!


சேலம்:பிப்.22.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரளானோர் மஜக வில் இணைந்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து சேலத்தில் மாவட்ட செயலாளர் M.A. மகபூப் அலி, அவர்கள் முன்னிலையில் திரளானோர் கட்சியில் இணைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜக வில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதில் மாவட்ட பொருளாளர் O.S. பாபு மாவட்ட துணைச் செயலாளர் சர்புதீன், முகம்மது சுகைல், முகமது ஷபீர், மருத்துவ சேவை அணி செயலாளர் ஹஸுன், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் தஸ்தகீர், விவசாய அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர் , மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சேலம்_மாவட்டம்
21.02.2021