
நாகை.பிப்ரவரி.11., கர்நாடாகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் தலைப்பாகை (ஹிஜாப்) அணிவதற்கு தேவையற்ற எதிர்ப்புகளை உருவாக்கி சங்பரிவார ஆதரவு சக்திகள் வன்முறை செய்வதை கண்டித்து நாடெங்கும் ஜனநாயக சக்திகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்து சமுதாய பொதுமக்கள் சங்கிகளுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு சமூக மக்கள் மற்றும் தலைவர்களோடும், சமூக நீதி ஆளுமைகளோடும் இணைந்து சட்ட விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இன்று கொட்டும் மழையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மஜக சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
காலை முதல் மழை தொடர்ந்து பெய்துக்கொண்டிருந்த நிலையில் திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மழை நீர் தேங்கியதால் வேறு பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கும் பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் அப்போதும் பெய்துக்கொண்டிருந்த தூறல் மழையில் நனைந்தப்படியே பங்கேற்றனர்.
மஜக மகளிர் அணியினர் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.
மழை காரணமாக நேர நெருக்கடி கருதி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் விழிப்புணர்வு முழுக்கங்களை மட்டும் எழுப்பினார்.
பிறகு பிரபல பெண்ணிய செயல்பாட்டாளரும், சிறந்த பேச்சாளருமான சகோதரி நாகை. வேம்பு பாலா அவர்கள் மிக சிறப்பாக பேசினார்.
அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு…
“ஹிஜாப்” என்பது பெண்கள் தற்காப்புக்காக அணியும் மேலாடை. அது முஸ்லிம் பெண்களின் கலாச்சார உரிமை. அவர்களுக்கு பிடித்திருப்பதால் அதை அணிகிறார்கள். சட்டம் இதற்கு அனுமதிக்கிறது.ஒரு மாணவியை அவளது ஆடை கலாச்சாரத்திற்காக சுற்றி வளைத்து மிரட்டுவது கோழைத்தனம். இப்போதுதான் முஸ்லிம் பெண்கள் படிக்க வருகிறார்கள். இது போன்ற செயல்கள் அதை தடுப்பது போல இருக்கிறது.
அச்சுறுத்தலை பற்றி கவலை படாமல் “அல்லாஹ் அக்பர்” என்று தன்னந்தனியே அந்தபெண் முழங்கியது சுயமரியாதைக்கான முழக்கம்.
அவர்கள் தங்கள் பண்பாட்டு ஆடைகளோடு கல்வி கூடங்களுக்கு வருவதை இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்?
பெண் கல்வியை தடுக்க முனைவது குற்றம். “ஹிஜாபை” அனுமதிக்காத கல்வி கூடங்கள் நாட்டுக்கு தேவையில்லை.
இவ்வாறு அவர் காட்டமாக பேசினார்.
அவர் பேசப் பேச பெண்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
மழை காரணமாக அவர் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டாலும் அவரது எழுச்சியுரை இலக்கியம், பெண்ணியம், அரசியல் அறம் மற்றும் அறிவு சார்ந்ததாக இருந்தாக அனைவரும் பாராட்டினர்.
தொடர் மழை காரணமாக நிகழ்ச்சிக்கு வர இயலாது போதும் சகோதர சமுதாய உறவுகள் முகநூல் நேரலையில் பார்த்து விட்டு உரையும், முழக்கங்களும் பன்முகத்தன்மையுடன் இருந்ததாக மஜக நிர்வாகிகளிடம் அலைபேசி வழியாக பாராட்டியுள்ளனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, ஜமாத் மன்ற தலைவர் M.ஜபருல்லாகான், முன்னாள் ஜமாத் தலைவர் KMKI. நவாஸ் தீன், ஜமாத் துணைச் செயலாளர் ஈ.ஹா.நாசர், பெரிய பள்ளி தலைமை இமாம் சாகுல் ஹமீது ஹஜ்ரத், மலாக்கா பள்ளி மஸ்ஜிதீன் ஆரிபின் நிர்வாகி அப்துல் கபூர், JAQH மர்கஸ் நிர்வாகி நெய்னா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகரச் செயலாளர் முகம்மது ஷெரீப், செய்யது ஆட்டோ ஜலாலுதீன், அப்துல் மஜிது, முபீன், சதாம், இம்தியாஸ் மற்றும் வளைகுடா MKP நிர்வாகிகள், ஜியாவுல் ஹக், ஆரிப், உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் சிறப்பான ஒருங்கிணைப்பை செய்திருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
11.02.2022