மார்ச்.22.,
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.
அதன்படி கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், I.N.D.I.A கூட்டணியின் சார்பில் கோவையில் போட்டியிடும் திரு. கணபதி ராஜ்குமார் அவர்களின் வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தீவிரமாக களப்பணியாற்றும் என்று பேசினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, டி.ஆர்.பி. ராஜா, திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் மஜக மாநில இளைஞர் அணி பொருளாளர் PMA.பைசல், மாவட்ட பொருளாளர் சிங்கை சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஹனீபா, ஜாஃபர் சாதிக், அன்வர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் ஜாகீர், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஃபைரோஸ், அபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாவட்டம்
21.03.2024.