You are here

72வது குடியரசு தின நிகழ்ச்சிகள்..! புலிவலத்தில் மஜக சார்பாக தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்!!


ஜன.26,

இன்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதக்குடி கிளை சார்பாக 72 வது குடியரசு தினம் மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தேசிய கொடியை மஜக திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன் முன்னிலையில் மதிமுக ஆரூர் சீனிவாசன் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக
திராவிடர் கழகம் S.S.M.K காந்தி, அமமுக C.முருகானந்தம், CPI E.அசோகன், பாரதி பேரவை முத்துராமன், IUML ஹாஜாமைதீன்
பங்கேற்க மஜகவின் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
26.01.2021