மார்ச்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை ஐக்கிய அரபு அமீரக மண்டல, அல் அய்ன் மாநகரம் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி (23.03.2024) மாலை அல்தோபாவில் அல் அய்ன் மாநகர செயலாளர் S.முஹம்மது இம்ரான் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக A.அப்துல் காதிர் அவர்கள் கிரா அத் ஓதி துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் Dr.A.அசாலி அஹ்மது அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேலான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அமீரக மண்டல மூத்த ஆலோசகர் M.சேக் தாவூத், அமீரக மண்டல கௌரவ ஆலோசகர் அபுல் ஹசன், அமீரக துணை செயலாளர் M.அப்துல் நாசர்,அமீரக செயற்குழு உறுப்பினர்கள் இலந்தங்குடி M.முகம்மது யூசுப், பூதமங்கலம் A.ஜாகிர் உசேன் உள்ளிட்ட அபுதாபி மாநகர மற்றும் அல் அய்ன் மாநகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.! நிகழ்வின் இறுதியில் அல் அய்ன் மாநகர பொருளாளர் N.M பஜ்லுல் ஹக் அவர்கள் நன்றியுரை கூறி இனிதே நிறைவுற்றது. தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MKPitWING #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #அல்_அய்ன்_மாநகரம் #ஐக்கிய_அமீரகம் 23.03.2024.
தமிழகம்
தமிழகம்
நாகை நாடாளுமன்ற தேர்தல் களம்… திருவாரூரில்… முதல்வர் கூட்டத்தில் எங்கெங்கு காணினும் மஜக கொடிகள்…
மார்ச்.24., தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தீவிர கள வேலை செய்யும் பொருட்டு, மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். தற்போது மஜக-வினர் களத்தில் தீவிரமாய் பணியாற்ற புறப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் நாகை தொகுதியின் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்நிகழ்வில் திரும்பும் திசை எங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இது முதல்வரின் பார்வையை வெகுவாக ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 24.03.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளாக, இளைஞர் அணி மாவட்ட செயலாளராக, J. பிரவீன்குமார்-BSC த/பெ; A. ஜெகநாதன் North street, துறையூர் திருமருகல் (ஒன்றியம் ) நாகப்பட்டினம் (dt) அலைபேசி; 9361812288 இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளராக, முஹம்மது அசாருதீன் த/பெ; சாகுல் ஹமீது 1/43 ஏ-11பி சேட்டு காலணி, ஹாஜியார் தெரு, ஏனங்குடி - நாகை அலைபேசி; 8220994828 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.03.2024.
தென்சென்னை INDIA கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் பங்கேற்பு..
மார்ச்.24., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார். இக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன், துணை மேயர் மகேஷ்,சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு,சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், தி.நகர் கருணாநிதி, விருகம்பாக்கம் பிரபாகர ராஜா, வேளச்சேரி ஹஸன் மௌலானா, தாயகம் கவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மஜக மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர், மாவட்ட துணைச்செயலாளர் நாகூரான் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தென்சென்னை_மாவட்டம் 23.03.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024… திருவள்ளூர் கிழக்கு … திமுக மாவட்ட செயலாளர்ருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….
மார்ச்.24., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜ்MLA அவர்களை மஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் சையத் அப்ரார், மாவட்ட துணைச்செயலாளர் அன்சர் பாஷா, அமீர் அப்துல் காதர், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது ரஃபி மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 23.03.2024.