மார்ச்.26, மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு இன்று இந்தியா கூட்டணியின் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் MP., அவர்கள் வருகை தந்தார். அவர்களை தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்றார். கடந்த முறை மஜக-வினரின் களப்பணிகள் குறித்து நினைவு கூர்ந்து பேசிய தமிழச்சி அவர்கள், இம்முறையும் உங்கள் இளைஞர் படை தீவிரமாக களப்பணி மற்றும் பரப்புரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். வேட்பாளர் அறிமுக நிகழ்வில் மஜக-வினரின் பங்களிப்புகள் சிறப்பாக இருந்தது என்றும் கூறினார். காலில் காயம்பட்ட நிலையில், படியேற முடியாத நிலையில் மஜக அலுவலகத்திற்கு வந்த அவருக்கு மஜக-வினர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம். ஷஃபி, நாகை. முபாரக், நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் அசாருதீன் ஆகியோரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் 26.03.2024.
தமிழகம்
தமிழகம்
மஜக தலைமையகத்திற்கு… அமைச்சர் சேகர்பாபு தயாநிதி மாறன் MP கலாநிதி விராசாமி MP வருகை! தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு….
மார்ச்.26., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு இன்று அமைச்சர் திரு. சேகர் பாபு வருகை தந்தார், அவருடன் இந்தியா கூட்டணியின் மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் MP, வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி விராசாமி MP ஆகியோரும் அவருடன் வருகை தந்தனர். அவர்களை தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்றார். அப்போது பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S. ரிஃபாயி, துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் ஆகியோரும் உடனிருந்தனர். மத்திய சென்னை மற்றும் வட சென்னை ஆகிய தொகுகளில் மஜக-வினரின் களப்பணிகள் குறித்தும், பரப்புரை குறித்தும் பேசப்பட்டது. இருவரின் வெற்றியும் எங்கள் வெற்றி என்று தலைவர் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறினார். அப்போது மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம். ஷஃபி, நாகை. முபாரக், நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் அசாருதீன், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் / MJVS மாநில செயலாளருமான பிஸ்மில்லா கான் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல்: #தேர்தல்_பணிக்குழு #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் 26.03.2024.
பொள்ளாச்சியில்… பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் அலுவலக திறப்பு விழா!! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு…
மார்ச்.26., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மஜகவினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணியின் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ் தலைமையில் மஜக-வினர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவிலும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் அமைச்சர் கயல்விழி, மாநில இளைஞர் அணி பொருளாளர் PMA.பைசல், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹனீபா, அன்வர் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நர்சரி ஷாஜஹான், பைரோஸ், பொள்ளாச்சி நகர செயலாளர் சம்சுதீன், பொருளாளர் பாசித், நகர துணைச் செயலாளர் அலாவுதீன், அப்பாஸ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் அலாவுதீன், நகர இளைஞரணி செயலாளர் இஸ்மாயில், இளைஞர் அணி பொருளாளர் ஷாக்கீல்,
நாகை INDIA கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு…
மார்ச்.25., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் நாகை லலிதா மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய துணைப்பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் அவர்கள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார். இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான், நாகை மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லா, திருவாரூர் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, நாகை மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது(எ) கண்ணுவாப்பா,பேபி ஷாப் (எ) பகுருதீன்,பாலமுரளி, மஜக நாகை நகரமன்ற உறுப்பினர் M.ஜென்னத்பேகம் MC, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அப்துல் மாலிக்,ஒன்றிய நிர்வாகிகள் மஞ்சை சதாம்,திருமருகல் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் மற்றும் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால், அப்துல் கரீம், ரிஸ்வான், மூத்த
திருச்சியில்… INDIA கூட்டணி வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல்… மஜக நிர்வாகிகள் பங்கேற்பு…
மார்ச்.25., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணியின் திருச்சி மதிமுக வேட்பாளர் திரு. துரை வைகோ அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு பாய் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். மஜக-வினரின் பணிகளையும், தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எடுத்த அரசியல் முடிவையும் அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள் வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம் 25.03.2024.