You are here

மஜக தலைமையகத்திற்கு… அமைச்சர் சேகர்பாபு தயாநிதி மாறன் MP கலாநிதி விராசாமி MP வருகை! தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு….

மார்ச்.26.,

மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு இன்று அமைச்சர் திரு. சேகர் பாபு வருகை தந்தார்,

அவருடன் இந்தியா கூட்டணியின் மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் MP, வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி விராசாமி MP ஆகியோரும் அவருடன் வருகை தந்தனர்.

அவர்களை தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்றார்.

அப்போது பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S. ரிஃபாயி, துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.

மத்திய சென்னை மற்றும் வட சென்னை ஆகிய தொகுகளில் மஜக-வினரின் களப்பணிகள் குறித்தும், பரப்புரை குறித்தும் பேசப்பட்டது.

இருவரின் வெற்றியும் எங்கள் வெற்றி என்று தலைவர் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறினார்.

அப்போது மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம். ஷஃபி, நாகை. முபாரக், நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் அசாருதீன், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் / MJVS மாநில செயலாளருமான பிஸ்மில்லா கான் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல்:
#தேர்தல்_பணிக்குழு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
26.03.2024.

Top