மே.11.,
மலேசியாவில் ஜாஹீர் உசேன் பிஸ்ட்ரோ (அழகன்குளம்) அவர்களின் மகள் – மணமகள் சபினா ரோசன் அவர்களுக்கும், ஹாஜி முகமது ரித்தாவுதீன் (பனைக்குளம்) அவர்களின் மகன் – மணமகன் முபின் அகமது ஆகியோருக்கும் இன்று திருமணம் எனும் நிக்காஹ் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று கோலாலம்பூர் வருகை தந்தார்.
அப்போது மணமக்களை வாழ்த்தியவர், சமூகத்திற்கான பொது அறிவுகளையும் கூறினார்.
அந்த உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:
மலேசியாவில் வாழும் நீங்கள் காலத்தின் சவால்களுக்கு ஏற்ப உங்கள் பிள்ளைகளை உருவாக்குங்கள்.
நவீன கல்வியில் அவர்களை பயிற்றுவியுங்கள்.
அத்துடன் மார்க்கப் பற்றோடு நமது கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
அது போல் தாய்மொழியை மறவாமல் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
வீட்டில் தமிழில் பேசி உரையாடுங்கள்.
மார்க்கமும், தாய்மொழியும் நமது அடையாளங்கள்.
அதை மறந்து விடக்கூடாது.
நமது மூதாதையர்கள் இங்கு வந்தப் போது எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இங்கு நீங்கள் இப்போது செழிப்பாக வாழ்வதற்கு அவர்கள் முக்கிய காரணம் என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கடந்த 1990-களுக்கு பிறகு உங்களின் பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. தொழில்கள் வளர்ந்திருக்கிறது.
நீங்கள் இப்போது சம்பாதிப்பதை வீணடித்து விடாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்..
நாங்கள் இந்தியர்கள். நீங்கள் மலேசிய இந்தியர்கள்.
நீங்கள் மலேசியா வாழ் குடிமக்கள் என்பதை உணர்ந்து எதிர்காலத்தை வழிநடத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சுபைதா குழுமங்களின் தலைவர் டத்தோ. அஜீஸ், ரிசான் ஜீவல்லரி ஜெமில் – உசேன் சகோதரர்கள், கலைமகன் முபாரக், நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்லம், மலேசிய பழனிபாபா பாசறை தலைவர் ஃபைசல், மலேசிய பனைக்குளம் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோருடன் மலேசிய மனித நேய சொந்தங்களும் பங்கேற்றனர்.
தகவல்:
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#கோலாலம்பூர்_மண்டலம் –
#மலேஷியா
11.05.2024.