மார்ச்.26,
மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு இன்று இந்தியா கூட்டணியின் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் MP., அவர்கள் வருகை தந்தார்.
அவர்களை தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்றார்.
கடந்த முறை மஜக-வினரின் களப்பணிகள் குறித்து நினைவு கூர்ந்து பேசிய தமிழச்சி அவர்கள், இம்முறையும் உங்கள் இளைஞர் படை தீவிரமாக களப்பணி மற்றும் பரப்புரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வேட்பாளர் அறிமுக நிகழ்வில் மஜக-வினரின் பங்களிப்புகள் சிறப்பாக இருந்தது என்றும் கூறினார்.
காலில் காயம்பட்ட நிலையில், படியேற முடியாத நிலையில் மஜக அலுவலகத்திற்கு வந்த அவருக்கு மஜக-வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம். ஷஃபி, நாகை. முபாரக், நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் அசாருதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
26.03.2024.