மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட பொருளாளராக, சங்கை தாஜ்தீன் த/பெ;அப்துல் கபூர் ஜமாலியா தெரு, சங்கரன் பந்தல், தரங்கம்பாடி-தாலுக்கா, மயிலாடுதுறை-609308 அலைபேசி; 9585287808 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 31.03.2024.
தமிழகம்
தமிழகம்
இராமநாதபுரம்…..மாவட்ட மஜக ஆலோசனை கூட்டம்!! இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் பங்கேற்பு….
மார்ச்.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதியின் INDIA கூட்டனியின் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு அமைத்து தொடர் பிரச்சாரமும் துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக மக்கள் கூடும் இடங்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள் மார்க்கெட் என்று அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சையத் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், மாவட்ட துணை செயலாளர்கள் கருத்தமரைக்கா, சித்தார் கோட்டை ஆஸாத், அபுல் ஹசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பணைகுளம் ஆசிக், MJTS மாவட்ட செயலாளர் தொண்டி சேக், நகர செயலாளர் செய்யது அலி நகர தகவல் தொழில் நுட்ப அணி ஜாபர், ஆத்தங்கரை ஆஸாத்,
சிவகங்கை… பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம்… மஜக மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக்அலி பங்கேற்பு….
மார்ச்.30., சிவகங்கை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ஆலங்குடி ஒன்றியம், கீரமங்கலம் மற்றும் அறந்தாங்கி தெற்கு ஒன்றியங்களில் நடைபெற்றது. மத்திய முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம், மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் மெய்யநாதன் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின், மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி பங்கேற்று பேசினார். புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முகம்மது இப்ராஹிம் தலைமையில் கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய செயலாளர் பகுருதீன், அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது மற்றும் திரளான மஜக-வினர் கலந்துகொண்டனர் தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #சிவகங்கை_நாடளுமன்ற_தொகுதி 30.03.2024.
குவைத்தில்.. மஜக சார்பில் நடைபெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…
மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டலம் சார்பில் தொடர்ந்து எட்டாம் ஆண்டு நிகழ்வாக மாபெரும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நேற்று (29-03-2024) வெள்ளிக்கிழமை தஸ்மா அரங்கில் நடைபெற்றது துவக்கமாக மண்டல பொறியாளர் அணி செயலாளர் பேர்ணாம்பேட் Er.துஃபைல் நீதிபோதனை வழங்க, மண்டல IKP செயலாளர் நீடூர் முஹம்மது ஹாலிக் வழங்க, மண்டல கொள்கை பரப்பு செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி நிகழ்வை தொகுத்து வழங்கினார். மண்டல அவைத்தலைவர் வேலம்புதுக்குடி சர்புதீன், மண்டல பொருளாளர் பொதக்குடி சதகத்துல்லாஹ், தந்தை பெரியார் நூலகம் காப்பாளர் தோழர் சித்தார்த், பொறியாளர் மணிவாசகன், பரக்கா டேட்ஸ் அக்பர், கூனிமேடு சாதிக் பாஷா, மவ்லவி அலி ரஷாதி, தோழர் சிவபிரகாசம், அக்பர் உணவகம் சிராஜூதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மவ்லவி அப்துல் ஹமீது சரயீ அவர்கள் 'இஸ்லாம் கூறும் குடும்ப உளவியல்' என்ற தலைப்பில் மிக சிறப்பாக சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், தமிழ் ஆர்வளர்கள், பல்வேறு சமூகங்களை சேர்ந்த
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… மஜக மாநில துணை செயலாளர் முஹம்மது மஃரூப் பங்கேற்பு….
மார்ச்.29., மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (29.3.2024) சிக்னேச்சர் மஹாலில் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ், மாண்புமிகு அமைச்சர் மெய்யநாதன் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளரும், மாநில துணை செயலாளருமான அ. முஹம்மது மஃரூப் பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம், மேற்கு மாவட்ட செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான், லியாகத் அலி, நீடுர் மிஸ்பா, நீடுர் ஜெப்ரூதீன் தஞ்சை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் குடந்தை ஆசாத் மற்றும் ஹ. சேக் முஹம்மது அப்துல்லாஹ், இப்ராஹீம் ஷா, ஹசேன் முஹம்மது, திருப்பனந்தால் சாதிக், பாபநாசம் அஸ்ரப் அலி, அய்யம்பேட்டை சேக் மற்றும் திரளான மஜகவினர் கலந்துகொண்டனர் தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #மயிலாடுதுறை_நாடளுமன்ற_தொகுதி 29.03.2024.