ஏப்ரல்;6. நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் CPI வேட்பாளர் செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்து அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் வருகை தந்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா (எ) ஷாகுல் ஹமீது தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்றனர். கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பரித்த மஜக-வினரின் எழுச்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் பார்த்து கையசைத்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மஜக-வினரின் எழுச்சியை பாராட்டினர். இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மாவட்ட அவை தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் பாலமுரளி, மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் உமர் முக்தார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், நாகை ஒன்றியம் மஞ்சை சதாம், நாகை நகர துணை செயலாளர் செல்லத்துரை (எ) அப்துல் காதர், சுலைமான் அனஃப், நாகூர் நகர நிர்வாகிகள் ஷாகுல் ஹமீது, யாசர் முகமது, சஃபியுல்லா,IT இஸ்மாயில் மற்றும் அப்துல் ரஹ்மான், பொரவச்சேரி கண்ணுவாப்பா, அனஸ் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING #நாகை_நாடாளுமன்ற_தொகுதி 05.04.2024.
தமிழகம்
தமிழகம்
மத வழிபாட்டுத்தலங்களுக்கு வேட்பாளர்கள் சென்று வாக்கு சேகரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நாகர்கோவில்… இந்தியாவுக்கு வசந்த காலம் தொடங்கி விட்டது! வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களை ஆதரித்து மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
ஏப்ரல்.05., கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களை வெற்றி பெற செய்யும் வகையில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. காலையில் குளச்சல் பகுதி பரப்புரைக்கு வர தாமதமான நிலையில், இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது... சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டத்தில் நாம் இத்தேர்தலை அணுகுகிறோம். இதுவரை நடைபெற்ற தேர்தல்களை விட இத்தேர்தல் களம் வித்தியாசமானது. முக்கியமானது. மணிப்பூரில் தேர்தல் ஆதாயத்திற்காக சொந்த மக்களை இன ரீதியாக மோத விட்டு, இவர்களே ஆயுதங்களை வழங்கினார்கள். சொந்த நாட்டு மக்கள் மோதிக் கொண்டு உயிரிழந்தார்கள். எத்தனையோ வெளிநாடுகளுக்கு போன பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு கடைசி வரை போகவில்லை. இதுதான் இவர்களது அரசியல். எதிர்வரும் ஏப்ரல் 19 என்பது வாக்களிக்கும் நாள் மட்டுமல்ல.... காந்தி தேசத்தை மீட்டெடுக்கும் நாளாகும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் NEET தேர்வை விரும்பிய மாநிலங்கள் மட்டுமே ஏற்கலாம் என கூறப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாளாக்குவோம் என்றும், தினமும் 400 ரூபாய் சம்பளம் என்றும் கூறியுள்ளனர். வறுமை கோட்டில் உள்ள பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் என்றும் கூறியுள்ளனர். சுங்கச்சாவடிகள்
தாய்வீடு திரும்பல்! வடசென்னை மேற்கு மாவட்டத்தில் மஜகவில் இணைந்த மனிதநேய சொந்தங்கள்..
ஏப்ரல்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர். தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் நிலையாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரையும் மஜக-வின் பக்கம் ஈர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வடசென்னை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஓட்டேரி. ரஜாக் அவர்கள் தலைமையில் திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த அம்துல் சமது,C.N.கரீம் மற்றும் M.நசீர் ஆகியோர் மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இதில் செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர் அவர்கள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வடசென்னை_மேற்கு 05.04.2024.
நாச்சிக்குளத்தில்… பாலஸ்தீன ஆதரவு நாள் முழக்கம்! மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு…
ஏப்ரல்.05., இன்று சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரித்து உலகமெங்கும் அல்குத்ஸ் தினம் என்ற பெயரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. தமிழநாட்டில் இதனை 'பாலஸ்தீன ஆதரவு நாள்' என மனிதநேய ஜனநாயக கட்சி கடைப்பிடிக்கும் என தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். இன்று மஜக-வினர், 'இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம்' என்ற பதாகை ஏந்தி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்கள், ஜமாத்தினர், சேவை அமைப்புகள் மஜக-வின் வேண்டுகோளை ஏற்று இப்பரப்புரையை பல இடங்களில் கூட்டமாக குழுமி பதாகை ஏந்தி பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களையும் எழுப்பி, அதை வலைதளங்களில் பதிவிட்டு ஆர்ப்பரித்து வருகின்றனர். இன்று ஜமாத் சார்பில் நாச்சிக்குளத்தில் - பெரிய பள்ளி வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு நாளை முன்னிட்டு பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஜமாத் நிர்வாகிகள் இதை வழிநடத்தினர். இதில் மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் உள்ளிட்ட மஜக-வினரும் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 05.04.2024.