மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மண்டல செயலாளராக, பாலவாக்கம் M.A. அலி த/பெ; ஆதம் 3/16A, காந்தி நகர், 2வது தெரு, பாலவாக்கம், செ.41 அலைபேசி; 8778182232 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09.04.2024.
தமிழகம்
தமிழகம்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக, அப்துல் அஜீஸ் த/பெ; முகமது சாலி 15/8 பாப்பாய் அம்மாள் தெரு, நெல்லிக்குப்பம். அலைபேசி; 8124242337 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09.04.2024.
முத்துப்பேட்டையில்….. இந்திய கூட்டணி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் வாக்கு சேகரிப்பு. மஜக துணைப்பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் பங்கேற்பு….
ஏப்ரல்.09., முத்துப்பேட்டையில் நாகை நாடளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்கள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் M.செல்வராசு அவர்களும், நாகையின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான AKS.விஜயன் அவர்களும்,சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.. இதில் மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் கலந்து கொண்டு முத்துப்பேட்டை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். மேலும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் ஜான் முகம்மது, மஜக நகர செயலாளர் ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி துணைசெயலாளர் தவ்ஸித், சஜீத், லுக்மான், அப்துல்ரஹ்மான் உள்ளிட்ட திரளான மஜக-வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_பாராளுமன்ற_தொகுதி 08.04.2024.
பெரம்பலூர் தொகுதி பரப்புரை … ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை ! இதுதான் மோடி அரசின் சாதனையா? மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி…
ஏப்ரல்.8, பெரம்பலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அருண் நேரு அவர்களை ஆதரித்து இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை மேற்கொண்டார். அமைச்சர் நேரு, அப்துல்லா MP, மாணிக்கம் MLA ஆகியோரும் இதில் பங்கேற்றனர். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பரப்புரைக்கு பிறகு அய்யர்மலை என்ற இடத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது.... நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மோடி ஆட்சியில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கேட்டு விவசாயிகள் போராடுகிறார்கள். போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை மறக்க முடியாது. 16 மாதங்கள் டெல்லியில் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடியதை மறக்க முடியாது. இவர்கள் ஆட்சியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்கிறார் என்ற அவல நிலை உள்ளது. இதுதான் மோடி அரசின் சாதனையா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். செய்தார்களா? ஒரு வருடத்திற்கு 70 லட்சம் வேலை இல்லா பட்டதாரிகள் உருவாகிறார்கள். வேலை இல்லா திண்டாட்டம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை தீர்மானிக்க சட்டம்
தென்சென்னை… பிரச்சார களத்தை பிரம்மாண்டமாகிய மஜகவின் வாகன பேரணி…
ஏப்ரல்.08., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். மஜக-வினரையும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட அறிவுறுத்தி வருகிறார். அதன்படி தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர் தலைமையில் மஜக-வினர் இருசக்கர வாகன பேரணியில் கலந்துக்கொண்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரச்சார பரப்புரையில் இருசக்கர வாகனத்தில் மஜக-வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும் மஜக மாவட்ட துணைச்செயலாளர் கபீர் அஹமது, நாகூரான் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் சத்தியன், பகுதி பொருளாளர் காட்வின் துணைச் செயலாளர் மஹபூப் உட்பட திரளான மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #தென்சென்னை_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING 05.04.2024.