போலி ஆவணங்கள் மூலம் முகம் தெரியாதவர்கள் மஜக-வுக்கு உரிமை கொண்டாடி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் கட்சி கட்டுக் கோப்போடு; தொண்டர் பலததோடு ;மக்கள் ஆதரவோடு உற்சாகமாக இயங்குகிறது. போலிகளின் சூழ்ச்சிகளை சட்டப்படி முறியடிப்போம்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறுதி வெற்றி எமது அணிக்கே! இவண், மெளலா M. நாசர் பொதுச் செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி 02.03.2024
தமிழகம்
தமிழகம்
தமுமுக மமகவில் இருந்து விலகி குங் பூ மாஸ்டர் மஜகவில் இணைந்தார்…
மார்ச்.02., ஓசூரில் நடைபெறுகின்ற பிரபல Chan's Kung-fu school-ன் உரிமையாளரும், தமுமுக மமக செயல்பாட்டாளருமான MASTER முனவ்வர் அவர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு தன்னிடம் கலை பயின்ற சிறந்த மாணவர்களோடு மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் மஜக-வில் இணைந்தார். இவரோடு இவரின் மாணவர்களான S.முஹம்மது ஆகிப் கான், அமீன், சாஹில் மற்றும் காலே குண்டாவை சேர்ந்த அபூ மற்றும் பாபு ஆகியோரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில தலைவர் மு. தமிமுன் அன்சாரி Ex. MLA அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்துள்ளனர் . இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ADS. சர்தார், சையத் ஜலால், ஒன்றிய செயலாளர் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மஹபூப் ஷரீஃப் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இறைவன் நாடினால் இணைப்புகள் தொடரும் என மஜக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம் 02.03.2024.
எங்கும் இளைஞர் மயம் எங்கள் மீதி நிர்வாகிகள் பள்ளிக்கூடங்களில் படித்துக் கொண்டுள்ளனர் மஜக பொதுக் குழுவில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
மார்ச்.02., ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் பிப்ரவரி 28 அன்று நடைபெற்றது. இதில் நம்பிக்கையூட்டக் கூடிய வகையில் 60 சதவீத நிர்வாகிகள் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உற்சாகம் ததும்ப வலம் வந்தனர். மண்டப வாசலில் கட்சி பேனருடன் தற்படம் ( Selfi ) எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் படம் எடுக்க அவர்கள் காட்டிய ஆர்வம் பரபரப்பாக இருந்தது. முகநூல், வாட்ஸ் அப் ஆகியவற்றை கடந்து INSTAGRAM - சமூக வலைப்பதிவில் ஈடுபாடு கொண்ட ஒரு தலைமுறையினராக அவர்கள் இருந்தனர். திரளான இளைஞர்கள் வருகை தந்த நிலையில், இளைஞர் அணிக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக கவுண்டரில் கூட்டம் அலைமோதியது. மாநில இளைஞர் அணி செயலாளர் புதுமடம் ஃபைசல் தலைமையில் இவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தகவல் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அலை, அலையாய் திரண்ட இளைஞர்களை, நீடூர் மஜக நிர்வாகிகள் பிரத்யேகமாக வரவேற்று உபசரிப்பதில் அக்கறை காட்டினர். மேலும் மதியம் 2.30 முதல் மாலை 4.30. மணி வரை அவர்கள் தலைவருடன் படம் எடுப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். அவரும் தொடர்ந்து உணவருந்தாமல் அவர்களின்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் மண்டல செயலாளராக பணியாற்றிய டாக்டர். A.அசாலி அகமது ( +971 50 961 4395 ) அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார். அமீரக நிர்வாகிகள் அவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவண், மெளலா M. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 02.03.2024.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திரளானோர் மஜக உறுப்பினராக இணைந்தனர்….
மார்ச்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஸ்ரீபெரும்புதூர் நகரத்தில் நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. நிகழ்வை மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M.நாசர் மற்றும் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் ரஹ்மான் கான் ஆகியோர் கலந்துக்கொண்டு துவக்கிவைத்தனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கட்சியின் துண்டறிக்கையை பெற்று மஜக-வின் உறுப்பினராக இணைந்தனர். உறுப்பினராக இணைந்த பலர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அரசியல் பணிகளை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நகர பொருளாளர் அப்துல் அஜீஸ், நகர துணை செயலாளர் சனாவுல்லாஹ், இளைஞர் அணி செயலாளர் அசரஃப் அலி, துணைச்செயலாளர் முகமது ரஃபீக், வணிகர் அணி நகர செயலாளர் அலாவுதீன், மற்றும் நசுருதீன், அபினாஷ், சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #காஞ்சிபுரம்_மாவட்டம் 01.03.2024.